News May 17, 2024

சிபிஎம் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்

image

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. சிபிஎம் (தமிழ்நாடு) எக்ஸ் பக்கம் நேற்றிரவு முடக்கப்பட்டது. இதனைக் கண்டு அக்கட்சியின் சமூக வலைதளப்பக்க நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்து, முடக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News May 17, 2024

APPLY NOW: 459 காலிப் பணியிடங்கள்

image

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான II 2024 அறிவிப்பை, யூனியன் பப்ளிக் சர்விசஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதில், 459 பணியிடங்கள் (Combined Defence Service) நிரப்படவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் upsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்யவும்.

News May 17, 2024

கெஜ்ரிவால் உதவியாளர் மீது வழக்குப்பதிவு

image

ஆம் ஆத்மி பெண் எம்.பி ஸ்வாதி மாலிவாலை டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ்குமார் தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. இவ்விவகாரத்தில், ஸ்வாதி மாலிவால் 4 நாட்களாக அமைதி காத்து வந்த நிலையில், போலீசாரிடம் தனது தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதன் அடிப்படையில் பிபவ்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கெஜ்ரிவால் இல்லத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

News May 17, 2024

வெளியேறியது டெல்லி கேபிட்டல்ஸ்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து, டெல்லி அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. KKR, RR, SRH அணிகள் ஏற்கெனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், நாளை நடைபெற உள்ள CSK-RCB இடையேயான போட்டியில், வெற்றி பெறும் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை மழையால் போட்டி ரத்தானால் கூட, 15 புள்ளிகளுடன் CSK அணி முன்னேறும். இதனால், 14 புள்ளிகளுடன் இருக்கும் டெல்லி அணி, ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது.

News May 17, 2024

சென்னையில் புரட்டி எடுக்கும் மழை

image

சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே அரைமணி நேரமாக முடங்கியுள்ளனர். வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம், தேனாம்பேட்டை, ஆவடி, கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி எடுத்த நிலையில், தற்போது மழை பெய்வதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 17, 2024

புகைப்படங்களை பகிர்ந்த விக்கி-நயன் ஜோடி

image

இயக்குநர் விக்னேஷ் சிவன்-நடிகை நயன்தாரா தம்பதி எடுத்துக் கொண்ட சுற்றுலாப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்துள்ள இருவரும், சமீபத்தில் கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்களை நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் நயன்தாரா நடித்துள்ள ‘டெஸ்ட்’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

News May 17, 2024

நெருக்கடியில் தவிக்கும் வோடாபோன் ஐடியா

image

வோடாபோன் ஐடியா நிறுவனம் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்நிறுவனம் ₹7,674 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இது முந்தைய காலாண்டை விட 9.85% அதிகமாகும். கடந்த நிதியாண்டில் நஷ்டம் ₹6,419 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்தமாக கடந்த நிதியாண்டில் ₹31,238 நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.

News May 17, 2024

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா

image

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில் தொழிற்சாலை, உந்துசக்தி பூங்கா அமைப்பதற்காக இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

News May 17, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கரூர், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் குடை மற்றும் ரெயின் கோட் எடுத்து செல்வது நல்லது.

News May 17, 2024

SCBA தலைவராக கபில் சிபல் தேர்வு

image

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் 4ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் அவர், 1,066 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதீப் ராய் 689 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்தார். இந்நிலையில், கபில் சிபலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!