News May 17, 2024

இணையத்தில் வைரலாகும் நிகிலாவின் பேச்சு

image

பெண் கதாபாத்திரங்களை படத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று ‘கிடாரி’ பட நடிகை நிகிலா விமல் கூறியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், கதைக்கு தேவையானவர்கள் மட்டுமே படத்தில் இடம்பெற வேண்டும் என்றார். அத்துடன், தேவையில்லாமல் பெண்களை சேர்த்தால் கதையின் போக்கு கெட்டுவிடும் எனவும் மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற படங்கள் வென்றதற்கு அதுவே காரணம் எனவும் கூறினார்.

News May 17, 2024

ராகுல் குறித்து நான் சொன்னது உண்மையாகி விட்டது: மோடி

image

உத்தர பிரதேச மாநிலம் பதேபூரில் நடந்த பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசினார். அப்போது அவர், வயநாடு தொகுதியை விட்டு ராகுல் ஓடப் போகிறார் என்றும், அமேதிக்கு மீண்டும் செல்ல மாட்டார் என்றும் தாம் முன்பு கூறியதாக தெரிவித்தார். அது தற்போது உண்மையாகி விட்டதாகவும், அமேதி தொகுதியில் போட்டியிடாமல், ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்றும் மோடி சாடியுள்ளார்.

News May 17, 2024

IPL தெரியும், ICL தெரியுமா?

image

இந்தியாவில் கடந்த 2008 முதல் IPL போட்டிகளை பிசிசிஐ நடத்தி வருகிறது. இதில், பல்வேறு நாடுகளின் வீரர்கள் விளையாடுவதால், உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், IPL தொடங்கப்படும் முன்பே, இந்தியாவில் ICL டி20 போட்டிகள் நடத்தப்பட்டன. ஜீ தொலைக்காட்சியால் 2007 முதல் 2009 வரை ICL நடத்தப்பட்டது. தடை உள்ளிட்டவற்றால் வீரர்கள் ஆர்வம் காட்டாதது, போதிய வரவேற்பு இல்லாததால் ICL கைவிடப்பட்டது.

News May 17, 2024

கல்வியை கருணாநிதி மயமாக்குவதா?

image

மறைந்த தலைவர் கருணாநிதி பற்றிய பாடங்களை இன்னும் எத்தனை பாடப் புத்தகங்களில் கொண்டு வருவீர்கள் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். 8, 9 & 10ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் கருணாநிதி பற்றிய தகவல்கள் பாடமாக சேர்க்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், “கல்வியை கருணாநிதி மயமாக்குவதை அரசு நிறுத்த வேண்டும். அறியப்படாத தலைவர்களின் வரலாறுகளை புத்தகங்களில் சேர்க்க வேண்டும்” என்றார்.

News May 17, 2024

ட்விட்டர் இனி எக்ஸ்.காம்

image

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர், அமெரிக்காவில் கடந்த 2006இல் ஆரம்பிக்கப்பட்டது. 2022இல் ட்விட்டரை டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கி, பெயரை எக்ஸ் என்று மாற்றினார். அப்போதிலிருந்து ட்விட்டர், எக்ஸ் என்ற பெயரில் செயல்படுகிறது. எனினும், இணையதள முகவரி ட்விட்டர் என்றே இருந்தது. தற்போது, இணைய முகவரியும் ட்விட்டர்.காம் என்பதிலிருந்து, எக்ஸ்.காம் என மாற்றப்பட்டுள்ளது.

News May 17, 2024

27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 27 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய இடங்களில் மழை பெய்ய உள்ளது.

News May 17, 2024

தவறை உணர்ந்துவிட்டேன்: சவுக்கு சங்கர்

image

அவதூறாக பேச தன்னை யாரும் தூண்டவில்லை என யூடியூபர் சவுக்கு சங்கர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கரிடம் விடிய விடிய நடைபெற்ற விசாரணையில், பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாகவும், அது தவறு என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன், தான் செய்த தவறை உணர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

News May 17, 2024

‘இந்தியன் 2’ வெளியாகும் அதே நாளில் ‘இந்தியன் 3’ ட்ரெய்லர்?

image

நீண்ட நாள்களாக படப்பிடிப்பில் இருந்த ‘இந்தியன்-2’ படம் ஜூலை மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்திற்காக அதிக காட்சிகள் எடுக்கப்பட்டதால் ‘இந்தியன்-3’ படத்தையும் உருவாக்கி வருகிறார்கள். இந்நிலையில், இப்படம் தியேட்டரில் வெளியானதும், படம் முடிந்தபின் இறுதியில் ‘இந்தியன் 3’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனத் தெரிகிறது.

News May 17, 2024

2 பேரை தவிர அனைவரையும் மும்பை அணி நீக்க வேண்டும்

image

சூரியகுமார் யாதவ், பும்ரா தவிர அனைவரையும் அடுத்த சீசனில் மும்பை அணி கழற்றிவிட வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் சீசனில் மோசமான ஆட்டத்தால் மும்பை முதல் ஆளாக வெளியேறியது. இதுகுறித்து பேட்டியளித்த சேவாக், ஷாருக், சல்மான், அமீர்கான் தனித்தனியே நடித்தால்தான் படம் வெற்றி பெறும். அதுபோல்தான் கிரிக்கெட்டும். ரோஹித், இஷான் ஆகியோர் சரியாக பேட் செய்யவில்லை என விமர்சித்துள்ளார்.

News May 17, 2024

இந்த நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் சோதிக்க முடியாது

image

முன்பதிவு ரயில்களில் மோசடி நடைபெறுவதை தடுக்க பயணிகளிடம் டிக்கெட் உள்ளதா என்பதை சோதிக்க டிக்கெட் பரிசோதகருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே டிக்கெட் சோதனையை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்குப் பிறகு, சோதனை நடத்த அவருக்கு ரயில்வே விதி அனுமதி தரவில்லை. அதற்கு முன்பே நடத்திவிட வேண்டுமென்று ரயில்வே விதியில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!