News May 17, 2024
ராகுல் குறித்து நான் சொன்னது உண்மையாகி விட்டது: மோடி

உத்தர பிரதேச மாநிலம் பதேபூரில் நடந்த பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசினார். அப்போது அவர், வயநாடு தொகுதியை விட்டு ராகுல் ஓடப் போகிறார் என்றும், அமேதிக்கு மீண்டும் செல்ல மாட்டார் என்றும் தாம் முன்பு கூறியதாக தெரிவித்தார். அது தற்போது உண்மையாகி விட்டதாகவும், அமேதி தொகுதியில் போட்டியிடாமல், ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்றும் மோடி சாடியுள்ளார்.
Similar News
News November 14, 2025
அதிக இடங்களில் பாஜக முன்னிலை

ஆளும் NDA கூட்டணி, ஆட்சியை தக்கவைக்க தேவையான 122 இடங்களை விட கூடுதல் இடங்களில்(126) தற்போது முன்னிலை பெற்றுள்ளது. BJP-67, JDU-49, LJP(RV)-3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அதேபோல், இந்தியா கூட்டணி 84 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதில், RJD-66, CONG-10, CPL(ML)-5 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
News November 14, 2025
லாலு பிரசாத் யாதவின் மகன் பின்னடைவு

RJD தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், தான் போட்டியிட்ட மஹுவா தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். யாதவ் சமூகத்தினர் அதிகமுள்ள இத்தொகுதியில் அவருக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. RJD-யில் இருந்து நீக்கப்பட்ட அவர், ஜன்ஷக்தி ஜனதா தள் (JJD) எனும் புதிய கட்சியை தொடங்கி போட்டியிட்டார்.
News November 14, 2025
பிஹார்: பெரும்பான்மையை நெருங்கும் NDA

பிஹார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் NDA கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 1 மணி நேரத்திலேயே 110 தொகுதிகளுக்கு மேல் NDA முன்னிலையில் இருக்கிறது.


