News May 31, 2024

குடும்பத்துடன் ஹாங்காங்கில் நயன்தாரா

image

கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக, நயன்- விக்கி தம்பதி தங்கள் குழந்தைகளுடன் ஹாங்காங்கிற்கு சென்றுள்ளனர். இன்று, ஹாங்காங்கில் பிரபலம் வாய்ந்த டிஸ்னி லேண்டிற்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. திரைத்துறையில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது குடும்பத்திற்காக இருவரும் நேரம் ஒதுக்கி வருகின்றனர்.

News May 31, 2024

13 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்யும்

image

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், தி.மலை., திருப்பத்தூர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், பெரம்பலூரில் மழை பெய்யக் கூடும். இதனால், சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 31, 2024

உள்துறை செயலாளர் மீது முதல்வர் அதிருப்தி?

image

ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவத்தில், உள்துறை செயலாளர் மீது முதல்வர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்துரையை அமுதா தன்னிச்சையாக சஸ்பெண்ட் செய்ததாகவும், இது தொடர்பாக முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை
என்றும் கூறப்படுகிறது. இதனிடையே முதல்வரின் ஆணையின் படி, இந்த சஸ்பெண்ட் உத்தரவு இன்று மாலை, அமுதாவால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News May 31, 2024

உலகக் கோப்பையில் இந்தியாவின் அதிகபட்ச ரன்கள்?

image

உலகக் கோப்பையில் ஒரு அணியின் அதிகபட்ச ரன்களை இலங்கை அணி (260 ரன்கள்) எடுத்துள்ளது. கென்யாவுக்கு எதிராக அந்த அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனை நீண்ட நாள்களாக முறியடிக்கப்படாமல் உள்ளது. அதேபோல் குறைந்தபட்ச ரன்களை நெதர்லாந்து அணி (39 ரன்கள்) இலங்கைக்கு எதிராக எடுத்தது. இந்திய அணி அதிகபட்சமாக 218 ரன் எடுத்து அதிக ரன்கள் குவித்த அணிகளின் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

News May 31, 2024

பறவைக் காய்ச்சல்: மாநில அரசுகளுக்கு உத்தரவு

image

கோழி உள்ளிட்ட பறவைகளின் திடீர் மரணம் குறித்த தகவலை, மாநில அரசுகள் உடனே தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, ஜார்க்கண்டில் பறவைக் காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மனிதர்களும் பாதிக்கும் அபாயம் உள்ளதால், தடுப்பு மருந்துகள், PPE கருவிகளை தயார் நிலையில் வைக்கவும், பாதிக்கப்பட்ட பறவைகளின் மாதிரிகளை சோதனை செய்யவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

News May 31, 2024

ராகுல் நேரில் ஆஜராக சம்மன்

image

சாவர்க்கர் குறித்த பேச்சு தொடர்பாக நேரில் ஆஜராக ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்தாண்டு மே 5ஆம் தேதி சாவர்க்கர் குறித்து, ராகுல் அவதூறு பரப்பியதாக சாவர்க்கரின் பேரன் சாத்யகி சாவர்க்கர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த புனே நீதிமன்றம், ஆகஸ்ட் 19இல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, சவார்க்கர் போல் ஒருபோதும் தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என ராகுல் கூறியிருந்தார்.

News May 31, 2024

வண்டலூர்-காட்டாங்கொளத்தூர் வரை உயர்மட்ட மேம்பாலம்

image

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள GST சாலையில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது. வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை NHAI மூலம் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

News May 31, 2024

ஜூன்4க்கு பிறகு பாஜக கூட்டணி கட்சிகள் பல்டி?

image

தேர்தல் முடிவுக்கு பிறகு INDIA கூட்டணியில் இணைய, NDA கூட்டணி கட்சிகள் வருவார்கள் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 2019 தேர்தலை விட இந்த முறை காங்கிரஸ் பல மாநிலங்களில் அதிக இடங்களை பிடிக்கும் என்ற அவர், உ.பி, பிஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிக இடங்களை பிடிப்போம் என்றார். தேர்தல் முடிவு வந்த பிறகு நிதிஷ் குமார், மீண்டும் பல்டி அடிப்பார் என பரப்புரையில் தேஜஸ்வி தெரிவித்திருந்தார்.

News May 31, 2024

VJ சித்து மீதான புகாரில் ஆராய்ந்து நடவடிக்கை

image

VJ சித்து மீது, பயிற்சி வழக்கறிஞர் ஷெரின் அளித்த புகாரில், ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 2023 நவம்பரில் செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வீடியோவை VJ சித்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு அவர் மீது ஷெரின் புகார் அளித்துள்ளார். இதேபோன்ற வேறொரு வழக்கில் TTF வாசன் கைதாகி, நேற்று ஜாமினில் விடுதலையானது குறிப்பிடத்தக்கது.

News May 31, 2024

நாளைய பயிற்சி போட்டியில் விராட் கோலி இல்லை?

image

வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டியில், விராட் கோலி பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான வீரர்கள், கடந்த வாரமே நியூயார்க் சென்று பயிற்சியைத் தொடங்கினர். ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் ஆகியோர் சற்று தாமதமாக அணியில் இணைந்தாலும், விராட் கோலி நேற்று தான் மும்பையில் இருந்தே புறப்பட்டார். இதனால், நாளைய போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!