News June 1, 2024

கதாநாயகியை மையப்படுத்தி உருவான படம் ₹100 கோடி வசூல்

image

சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அரண்மனை-4’ படம் ₹100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்தில் தமன்னா கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படம் குறித்துப் பேசியுள்ள தமன்னா, தென்னிந்தியாவில் கதாநாயகியை மையப்படுத்தி வெளியான ஒரு படம் ₹100 கோடி வசூலித்துள்ளது பெருமையாக உள்ளதாகக் கூறினார்.

News June 1, 2024

கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

image

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மலிவாலை தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நேற்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 14 நாள்கள் நீதிமன்றத் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News June 1, 2024

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வாணவேடிக்கை காட்டிய பூரண்

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த WI 20 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்து. WI அணியில் அதிரடியாக ஆடிய பூரண் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் விளாசி 75 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய ஆஸி., 20 ஓவர்களில் 222/7 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

News June 1, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News June 1, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

* திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.
* டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா – வங்கதேசம் மோதல்.
* 57 தொகுதிகளுக்கு இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
* சிறார் வாகனம் ஓட்டினால் ₹25,000 அபராதம் என்ற விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது.
* இன்று டெல்லியில் நடைபெறும் INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை.

News June 1, 2024

77 நாள்களில் 117 புகார்கள்

image

பாஜக தலைவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். கடந்த 77 நாள்களில் 117 புகார்களை, தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். மோடி 14, அமித் ஷா 3, யோகி ஆதித்யநாத் 8 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஒன்றில் கூட நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

News June 1, 2024

50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைப்பாரா ஷகிப்?

image

வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 47 விக்கெட்டுகளை (35 ஆட்டங்கள்) கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை நடைபெற்ற அனைத்து உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ள நிலையில், 2024 உலகக் கோப்பையிலும் விளையாட உள்ளார். 2ஆவது இடத்தில் பாகிஸ்தானின் அப்ரிடி (39), 3ஆம் இடத்தில் இலங்கையின் மலிங்கா (38) உள்ளனர். இந்தியாவின் அஸ்வின் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

News May 31, 2024

கடைசி கட்டத் தேர்தலில் களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள்

image

கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் நாளை, 57 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பிரதமர் மோடி (வாரணாசி), அனுராக் தாகூர், நடிகை கங்கனா ரனாவத், லாலு மகள் மிசா பாரதி, மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். அதைத் தொடர்ந்து நாளை மாலை 6 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகிறது. உடனுக்குடன் தகவலறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.

News May 31, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

*மேஷம் – முயற்சி செய்ய வேண்டிய நாள்
*ரிஷபம் – இன்பம் தேடி வரும்
*மிதுனம் – புகழ் உண்டாகும்
*கடகம் – செலவு அதிகரிக்கும்
*சிம்மம் – சுகமான நாள்
*கன்னி – வெற்றி கிடைக்கும்
*துலாம் – உறுதியான நாள்
*விருச்சிகம் – ஈகை உண்டாகும்
*தனுசு – பிறருக்கு உதவும் நாள்
*மகரம் – பகை உண்டாகும் *கும்பம் – சாந்தம் ஏற்படும் *மீனம் – அன்பு அதிகரிக்கும்

News May 31, 2024

தரம் தாழ்ந்த பரப்புரையை மக்கள் ஏற்க மாட்டார்கள்

image

மோடி தன்னையே கடவுளாக பரப்புரை செய்து வருவதாக சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். மோடி, ராமரை இத்தனை வருடங்களாக கடவுளாக கும்பிட்டு வந்ததாக தெரிவித்த அவர், தற்போது பிரதமர் தன்னைத்தானே கடவுளாக கூறி வருவதாக விமர்சித்தார். இப்படி ஒரு தரம் தாழ்ந்த பரப்புரையை, இந்தியாவில் இதுவரை எந்த பிரதமரும் செய்யவில்லை என்றும், இதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.

error: Content is protected !!