India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களிலும் திமுக வெற்றி பெறும் என்றார். காய்ச்சல் காரணமாக INDIA கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என விளக்கம் அளித்த அவர், பாஜகவிற்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடர் ஐரோப்பிய லெக்கின் 5ஆவது லீக் போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது. லண்டனில் நடைபெற்ற நடந்த ஆடவர் அணிகளுக்கு இடையிலான போட்டியில், நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணியை இந்திய ஹாக்கி அணி 0-3 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்-2024க்கு முன்னேற வேண்டுமென்ற இந்திய வீரர்களின் நம்பிக்கையை இரட்டிப்பாகியுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் விவாதங்களில் பங்கேற்க INDIA கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. டெல்லியில் நடைபெற்ற அந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் பங்கேற்காது என அக்கட்சி தலைவர் கார்கே கூறியிருந்த நிலையில், தற்போது தங்களின் முடிவை காங்கிரஸ் கட்சி மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
INDIA கூட்டணி 295 இடங்களில் வெல்லும் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற INDIA கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், தேர்தலை எதிர்கொண்ட விதம் குறித்தும், தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்புகள் குறித்தும் கூட்டத்தில் விவாதித்தாக அவர் தெரிவித்தார். INDIA கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம் என அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல், இன்று 7ஆவது கட்டமாக 57 தொகுதிகளுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.
காங்., ஆட்சியில் விதிமுறைகளை பின்பற்றாமல், தகுதியற்ற தொழிலதிபர்களுக்குக் கடன்கள் வாரி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக ஆட்சியில் பல வங்கி மோசடிகள் கண்டறியப்பட்டு, திவால் சட்டம் மூலம் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், யாருக்கும் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை, பலருக்கு ரைட் ஆஃப் மற்றும் தள்ளுபடிக்கு வித்தியாசம் தெரியவில்லை என்றார்.
2019 மக்களவைத் தேர்தலை விட, இம்முறை சற்று அதிக இடங்களில் பாஜக வெல்லும் என, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், வடக்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது எனவும், அதே நேரம், கிழக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகள் பாஜகவுக்கு உதவ காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பையில் தன்னை நிரூபிப்பார் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். பாண்டியாவின் பேட்டிங் திறன் குறைந்துவிட்டதாக எழுந்த விமர்சனம் கூட, அவர் முன்வரிசை வீரராக களமிறங்கியதால் நடந்ததாக கூறிய அவர், உலகக் கோப்பையில் அவர் பின்வரிசையில் இறங்கி அணிக்கு வலிமை சேர்க்க வேண்டும் என்றார். பாண்டியாவின் ஃபினிஷிங் ஆட்டம் இந்தியாவுக்கு வெற்றியை தரும் என்றும் கூறினார்.
இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் மின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று இதுவரை இல்லாத அளவில் உச்சபட்ச மின் தேவை 4,769 மெகாவாட்டாக இருந்துள்ளது. அதே போல, மின் நுகர்வு 101.76 மில்லியன் யூனிட்டாக இருந்ததாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை கொளத்தூரில் 12 வயது சிறுவனை நாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை இரு வளர்ப்பு நாய்கள் (ராட்வைர் & பாக்சர்) கடித்து குதறியதில் உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த சிறுவனை மீட்ட பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சென்னையில் குழந்தைகளை நாய்கள் கடிப்பது தொடர் கதையாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.