News June 1, 2024
ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடர் ஐரோப்பிய லெக்கின் 5ஆவது லீக் போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது. லண்டனில் நடைபெற்ற நடந்த ஆடவர் அணிகளுக்கு இடையிலான போட்டியில், நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணியை இந்திய ஹாக்கி அணி 0-3 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்-2024க்கு முன்னேற வேண்டுமென்ற இந்திய வீரர்களின் நம்பிக்கையை இரட்டிப்பாகியுள்ளது.
Similar News
News July 9, 2025
காதலியை ஐபிஎஸ் ஆக்க இப்படி ஒரு வழியா?

வடமாநிலங்களில் வேண்டுதலுக்காக பக்தர்கள் கங்கை நீர் காவடி சுமக்கும் வழக்கம் உண்டு. அப்படி ஹரித்துவாரில், காவடியில் இருபுறமும் கங்கை நீரை சுமந்துகொண்டு வந்த இளைஞர் கவனம் ஈர்த்துள்ளார். அவரின் வேண்டுதல் என்ன தெரியுமா? அவரின் காதலி இப்போதுதான் பிளஸ் டூ முடித்துள்ளாராம். அவர் படித்து ஐபிஎஸ் ஆகும்வரை கங்கை காவடி தூக்குவதாக வேண்டுதலாம். ஐபிஎஸ் ஆனபின் அப்பெண்ணை கல்யாணம் செய்துகொள்வாராம்.
News July 9, 2025
20 மாவட்டங்களில் இரவு மழை: IMD

இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சி, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதேபோல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமாம்.
News July 9, 2025
பெண்கள் நீண்ட நேரம் தூங்கினால் தான்..

தினமும் ஆண்களைவிட பெண்களுக்கு 20 நிமிடங்கள் கூடுதலாக தூக்கம் தேவைப்படுகிறதாம். ஆராய்ச்சிகளின் படி, பெண்கள் அதிகம் multi-task செய்பவர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை நுட்பமாக கையாளுவதால், அவர்களின் மூளை அதிகமான ஆற்றலை பயன்படுத்துகிறது. இதனால், அவர்களுக்கு கூடுதல் தூக்கம் தேவை. தூக்கம் குறைந்தால், மன அழுத்தம், பதட்டம், இதய நோய் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. நீங்க எவ்வளோ நேரம் தூங்குவீங்க?