News June 17, 2024

கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்!

image

உடலில் பக்கவாதம் ஏற்படுவதை போல, கண்களில் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, கண் சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கண்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால், கண்களில் பக்கவாதம் ஏற்படுவதாகவும், வெயிலால் வரும் அதீத வெப்பம் இதற்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்ப்பதாலும், அதிகளவில் தண்ணீர் குடிப்பதாலும் இதை தடுக்கலாம் என்கின்றனர்.

News June 17, 2024

யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்

image

நீட் தேர்வில் யார் முறைகேடு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரித்துள்ளார். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என்ற அவர், இரு மையங்களில் முறைகேடு நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது என்றார். மேலும், இந்த விவகாரத்தை தீவிரமாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News June 17, 2024

லிவிங் டூ கெதரில் வாழ்ந்தால் சட்டப்பூர்வ வாரிசு அல்ல: தீர்ப்பு

image

திருமணம் செய்யாமல் லிவிங் டூ கெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்க முடியாது என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. திருமணமாகி 5 குழந்தைகள் உள்ள நிலையில், ஜெயச்சந்திரன் என்பவர், லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்த மார்கரெட் அருள்மொழி பெயரில் தனது வீட்டை எழுதி வைத்துள்ளார். மார்கரெட் இறந்த நிலையில், சொத்தை அவரது தந்தை உரிமை கோரியதற்கு எதிரான வழக்கில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News June 17, 2024

ஏர் இந்தியா விமானத்தில் ‘இந்து மீல்ஸ், முஸ்லிம் மீல்ஸ்’

image

ஏர் இந்தியா விமானங்களில் இந்து மீல்ஸ், முஸ்லிம் மீல்ஸ் என 2 வகையில் உணவுப் பட்டியல் வழங்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் MP குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான X பதிவில், “இந்து மீல்ஸ், முஸ்லிம் மீல்ஸ் என்றால் என்ன? ஏர் இந்தியாவை சங்கிகள் கைப்பற்றிவிட்டனவா? விமானப் போக்குவரத்து அமைச்சகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

News June 17, 2024

பிரியாணியின் பின்னணி கதை…

image

பக்ரீத் என்றதும் பலருக்கும் நினைவில் வருவது, இஸ்லாமிய நண்பர்களின் அன்பு கலந்த பிரியாணிதான். பிரியாணி என்பது பிரியன் (அரிசி) என்ற பாரசீக வார்த்தையில் இருந்து உருவானதாக கூறப்படுகிறது. 1398இல் மங்கோலிய மன்னர் தைமூர், பிரியாணியை இந்தியாவிற்குள் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. பிரியாணி இந்தியாவிற்குள் வந்தது குறித்து பல கதைகள் இருந்தாலும், மேற்கு ஆசியாவில் தோன்றியது என்பதை பலரும் ஒப்புக்கொள்கின்றனர்.

News June 17, 2024

தயாரிப்பாளர் முருகன் குமாருக்கு எதிராக வாரண்ட்

image

பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளர் முருகன் குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரவிந்த் சாமி தொடர்ந்த வழக்கில் ₹35 லட்சம் சம்பள பாக்கியை வழங்க நீதிமன்றம் ஆணையிட்டும், வழங்கவில்லை. இதனால், இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைதுக்கு பயந்து அவர் தலைமறைவாகியதாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News June 17, 2024

இந்தியா-அமெரிக்கா உறவு வலுப்பெறும்: ஜெய்சங்கர்

image

இந்தியா-அமெரிக்கா உறவு வலுப்பெறும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடனான சந்திப்பு குறித்து Xஇல் பதிவிட்டுள்ள அவர், உலகளாவிய பிரச்னை, இருதரப்பு உறவு குறித்து விவாதித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், முக்கிய விஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News June 17, 2024

45 காசுகள் கொடுத்தால் ₹10 லட்சம் கிடைக்கும்

image

ஏழைகளின் ரதம் என்றழைக்கப்படும் ரயிலில், நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். இதற்காக, IRCTC தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, 45 காசுகள் கொடுத்தால் இன்சூரன்ஸ் பாலிசி சேர்க்கப்பட்டுவிடும். பிறகு, ரயில் விபத்து நேர்ந்து பயணிகள் இறக்க நேரிட்டால் ₹10 லட்சமும், காயமடைந்தால் காயத்தின் நிலைக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும். முன்னதாக, அந்த தொகையைப் பெற நாமினியை இணைத்திருக்க வேண்டும்.

News June 17, 2024

ரயில் விபத்துகளும், ராஜினாமா செய்த அமைச்சர்களும்…(3)

image

2000ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 46 பேர் உயிரிழந்த நிலையில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம், அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா கடிதம் கொடுத்தார். ஆனால், அவரது ராஜினாமா கடிதத்தை வாஜ்பாய் ஏற்கவில்லை.

News June 17, 2024

ரயில் விபத்துகளும்… பதவி விலகிய அமைச்சர்களும்…(2)

image

1999ஆம் ஆண்டு அசாம் மாநிலம் கவுஹாத்தி அருகே, அவாத் அசாம் ரயிலும், பிரம்மபுத்ரா மெயிலும் ஒரே பாதையில் வந்து நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிக்னல் இயக்குவதில் ஏற்பட்ட மனித தவறால் விபத்து நேர்ந்ததாக அறிக்கை வெளியானது. இதை தொடர்ந்து, விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சர் நிதிஷ் குமார் பதவி விலகினார்.

error: Content is protected !!