News June 18, 2024

T20WC சூப்பர் 8 விளையாடப் போகும் 8 அணிகள்

image

* இந்தியா (குரூப் A)
* அமெரிக்கா (குரூப் A)
* ஆஸ்திரேலியா (குரூப் B)
* இங்கிலாந்து (குரூப் B)
* மே.இ.தீவுகள் (குரூப் C)
* ஆஃப்கானிஸ்தான் (குரூப் C)
* தென்னாப்பிரிக்கா (குரூப் D)
* வங்கதேசம் (குரூப் D)

News June 18, 2024

இவிஎம் மீது நம்பிக்கை இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி

image

வாக்கு சீட்டு முறையை இந்தியாவில் அமல்படுத்த வேண்டும் என ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் கூட வாக்குச் சீட்டு முறையே பயன்படுத்தப்படுவதாக கூறிய அவர், ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்த இந்தியாவும் அதை நோக்கி நகர வேண்டும் என்றார். சமீப காலமாக அரசியல் தலைவர்கள் பலரும் வாக்குச்சீட்டு முறைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

News June 18, 2024

8ஆவது ஊதியக் குழு: மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

image

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்து, ரயில்வே தொழிலாளர்கள் கூட்டமைப்பு (AIRF) மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ஊழியர்களின் சம்பளத்தில் உள்ள வேறுபாடுகளை களையுமாறும், 8ஆவது மத்திய ஊதியக் குழுவை உடனடியாக அமைக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்களவைத் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 18, 2024

கருடன் திரைப்பட வெற்றியால் நடிகர் சூரி புது முடிவு

image

வடிவேலுக்கு பிறகு கிராம கதாபாத்திர காமெடியில் கலக்கி வந்தவர் சூரி. ஆனால், விடுதலை படத்தில் கதாநாயகனாகவும், கருடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒருவராகவும் நடித்திருந்தார். இந்த நடிப்பு பாராட்டப்படவே, இனி காமெடியனாக நடிப்பதில்லை எனவும், முன்பு போல வாய்ப்பு கிடைக்கும் படங்களில் எல்லாம் நடிக்காமல், ஆண்டுக்கு 3 அல்லது 4 படங்கள் மட்டுமே நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

News June 18, 2024

அதிமுகவில் இணைய ஓபிஎஸ் தீவிர முயற்சி?

image

தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டி, கட்சி ஒருங்கிணைய வேண்டும் என அறிக்கை வெளியிட்டு, அக்கட்சியில் இணைய ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்திருந்தார். தேமுதிக மூத்த தலைவர் சுதீஷை ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் சந்தித்துப் பேசிய போதும், இபிஎஸ்ஸிடம் பேசக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதுபோல், பல வழிகளிலும் அதிமுகவில் இணைய ஓபிஎஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News June 18, 2024

43 லட்சம் மாணவிகள் பயன் பெறுகின்றனர்

image

தமிழகத்தில் ‘மாதவிடாய் சுகாதாரத் திட்டம்’ மூலம் மாணவிகளுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பலர் இன்னும் மாதவிடாய் நேரங்களில் துணிகளை பயன்படுத்துகின்றனர். இதனால், நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் மூலம் 43 லட்சம் மாணவிகள் பயன்பெறுவதாக அரசு தெரிவித்துள்ளது.

News June 18, 2024

இன்று முதல் 547 ஆம்னி பேருந்துகள் இயங்காது

image

தமிழகத்தில் 2000 ஆம்னி பேருந்துகள் உள்ள நிலையில், அதில் 547 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படாது என அதன் உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது. ‘TN’ பதிவெண்ணாக மாற்ற வழங்கப்பட்ட கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இனி வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த 547 பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்பட உள்ளது.

News June 18, 2024

இந்திய அணி பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன்: ஹர்பஜன்

image

பாகிஸ்தான் அணியுடன் இருந்து நேரத்தை வீணாக்காமல், இந்திய அணிக்கு மீண்டும் பயிற்சியாளராக வருமாறு கேரி கிறிஸ்டனுக்கு ஹர்பஜன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். 2011 உலகக் கோப்பையை வெல்ல பயிற்சியாளராக கிறிஸ்டன் கொடுத்த உத்வேகம், கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு கொடுத்த உற்சாகம் இருந்ததாகத்
தெரிவித்துள்ளார். தற்போது பாக்., அணியின் பயிற்சியாளராக இருக்கும் கிறிஸ்டன், வீரர்களின் செயல்பாட்டை விமர்சித்திருந்தார்.

News June 18, 2024

திமுக மாநாட்டிற்கு கமல் வராததற்கு இதுவா காரணம்?

image

கோவை திமுக முப்பெரும் விழா மாநாட்டுக்கு கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. ஸ்டாலின் மேடைக்கு வர இரவு 8 மணி ஆகும் என்பதால், அதுவரை தன்னால் சாதாரண அரசியல்வாதியாக மேடையில் அமர முடியாது என கருதியதாகவும், முதல்வர் இல்லாத நிலையில் மேடையில் பேச தயாராக இல்லாததாலுமே அவர் வரவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் திமுக தலைமைக்கு வேறு ஒரு காரணத்தை கூறினாராம்.

News June 18, 2024

புதுப்படத்தால் விஜய் சேதுபதி முதலில் கவலை, பிறகு மகிழ்ச்சி

image

கதாநாயகனாக நடித்து வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்திக்க, மகாராஜா படத்தையே விஜய் சேதுபதி அதிகம் நம்பி இருந்தார். படம் வெளியான நாளன்று முதல் காட்சியின்போது தியேட்டர்களில் கூட்டமில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் கவலையில் இருந்த நிலையில், மாலையில் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. இதை கேள்விப்பட்ட அவர், வசூல் பட்டையை கிளப்பும் என மகிழ்ச்சி அடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

error: Content is protected !!