News June 18, 2024

4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்

image

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகிய இருவரும் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆலோசனை 24ஆம் தேதி முதல் தொடங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறியுள்ளார்.

News June 18, 2024

நாய்களுக்காக ₹45 கோடியில் வீடு கட்டிய பிரபலம்

image

மனிதர்களுக்கு செல்லப் பிராணியான நாய்கள் மீது எப்போதும் ஒரு தனிப்பிரியம் உண்டு. இதற்கு பிரபலங்களும் விதிவிலக்கு அல்ல. பிரபல இந்தி நடிகரான மிதுன் சக்ரவர்த்தி, 116 நாய்களை பராமரிக்கிறார். மும்பை அருகேவுள்ள மத் தீவில் 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கி ₹45 கோடிக்கு 76 நாய்கள் சுதந்திரமாக வாழ பங்களா கட்டியுள்ளார். அவருக்கு, ஊட்டி பங்களா உள்பட சுமார் ₹400 கோடி மதிப்பு சொத்துக்கள் உள்ளன.

News June 18, 2024

பாஜக கூட்டணிக்காக வருந்துகிறோம்: செல்லூர் ராஜூ

image

பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைக்க கூடாது என ஜெயலலிதா எடுத்த முடிவிற்கு மாறாக, கூட்டணி வைத்து விட்டோமே என்று வருத்தப்படுவதாக தெரிவித்த அவர், 2026 தேர்தலில் திமுக தனித்து போட்டியிட்டால் அதிமுகவும் தனித்து போட்டியிடும் என்றார். அதிமுகவை அதிகாரத்தை கொண்டு யாராலும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்தார்.

News June 18, 2024

மே மாத பொருள்களை ஜூன் இறுதிவரை பெறலாம்

image

மே மாதத்துக்கான ரேஷன் பொருள்களை ஜூன் மாத இறுதிவரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் துவரம் பருப்பு, பாமாயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்கு தடையின்றி வழங்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ரேஷன் கடைகளில் அரிசி தவிர்த்து இதர பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News June 18, 2024

மாம்பழம் சின்னம் கேட்டு பாமக கடிதம்

image

இடைத்தேர்தலில் மாம்பழம் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு பாமக கடிதம் எழுதியுள்ளது. எம்.பி தேர்தலில் குறைவான வாக்குகளை பெற்றதால், பாமக மாநில அந்தஸ்தை இழந்தது. இதனால், மாம்பழம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், மீண்டும் தங்களுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் சுயேச்சை சின்னத்தில் பாமக போட்டியிட வாய்ப்புள்ளது.

News June 18, 2024

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் வரும் 22ஆம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நகரின் சில பகுதிகளில் இரவு நேரத்தில் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 18, 2024

போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த ஊழியர்கள்?

image

திருநெல்வேலி போக்குவரத்து மண்டலங்களில் உள்ள பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என்று நாளேடுகளில் விளம்பரம் வெளியாகியிருப்பது ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் அல்லாமல் நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்பது ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதனை மீறும் வகையில் அரசு விளம்பரம் வெளியாகியுள்ளது.

News June 18, 2024

பிரபல பாடகிக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டது

image

Sensory Neural Nerve hearing loss என்ற அரிய வகை நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக பாலிவுட் பாடகி அல்கா யாக்னிக் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் விமானத்தில் இருந்து இறங்கியபோது காது கேளாமல் போனதாகவும் சோதனையில் இந்நோய் இருப்பது தெரியவந்ததாகவும் அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இவர், தமிழிலிலும் சில பாடல்கள் பாடியுள்ளார்.

News June 18, 2024

திமுக, பாமக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்

image

திமுக எம்எல்ஏ. புகழேந்தி மறைவுக்கு பின் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இங்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர்களை திமுக, பாமக, நாதக அறிவித்துள்ளன. அதே நேரம், அதிமுக, அதன் கூட்டணியில் உள்ள தேமுதிக இத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், திமுக வேட்பாளர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்கள்.

News June 18, 2024

G-Pay இல் தவறாக பணம் எடுக்கப்பட்டதா?

image

இந்தியாவில் G-Payயை பயன்படுத்துவோர் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று, எதிர்முனைக்கு பணம் செல்லாதபோதும், வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டிருப்பதாகும். பொதுவாக அந்தப் பணம் 3 முதல் 4 நாள்களுக்குள் திரும்பி செலுத்தப்படும். அப்படி கிடைக்கவில்லையெனில், 1-800-419-0157 எண்ணுக்கு போன் செய்தும், ‘Google Pay Help Center’ பக்கத்தில் புகாரை பதிவு செய்தும் பணத்தை திரும்பக் கோரலாம்.

error: Content is protected !!