India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தோள் பட்டை எலும்பு முறிவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பிளேட் பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஒரு வாரம் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என அவரது மகன் துரை வைகோ கூறியிருந்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் முதல்கட்ட படப்பிடிப்பில், 2 முக்கிய சண்டைக் காட்சிகளும், 1 பாடலும் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், முதல்கட்ட படப்பிடிப்பை ஜூன் 7ஆம் தேதி வரை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் பிறகு, விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் இணையவுள்ளார்.
2007 டி20 உலகக் கோப்பைத் தொடரில், 12 பந்துகளில் அரை சதம் கடந்த யுவராஜ் சிங்கின் சாதனை இன்று வரை முறியடிக்கப்படாமல் உள்ளது. அந்தப் போட்டியில், இங்கி., வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 சிக்சர் அடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதன் பிறகு, மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் போன்ற பல வெளிநாட்டு வீரர்கள் முயற்சித்தும், இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. இம்முறை இந்த சாதனை முறியடிக்கப்படுமா?
பல நிறங்களில் மின்சார வயர்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். அதன் பயன்பாட்டை தெரிந்து கொள்வோம். *கருப்பு-சுவிட்ச், பிளக் பாயிண்டுகளில் பயன்படுத்தப்படும் * சிவப்பு- இரு இணைப்புகளின் தொடர்பு வயர் * நீலம்- ஜங்ஷன் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் * மஞ்சள்- விளக்குகள், மின் விசிறிகளில் பயன்படுத்தப்படும் * வெள்ளை- ‘நியூட்ரல்’ ஆக பயன்படுத்தப்படும் * பச்சை- ‘எர்த்’ இணைப்புக்கு பயன்படுத்தப்படும்.
ஆட்டோ கியர் ஷிஃப்ட் (AGS) மாடல் கார்கள் விலையை மாருதி சுசூகி குறைத்துள்ளது. ஆல்டாே-கியோ, எஸ்-பிரெஸ்ஸோ, செலிரியோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர், பலினோ, பிரான்க்ஸ், இக்னைட் ஆகிய மாடல் கார்கள் விலை ₹5,000 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு உடனடியாக இன்று முதல் அமலுக்கு வருவதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை குறைப்பு காரணம் குறித்து எதுவும் மாருதி சுசூகி தெரிவிக்கவில்லை.
டெல்லியில் இன்று மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் INDIA கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கார்கே, ராகுல், கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் கலந்து கொள்கின்றனர். ரெமல் புயல் நிவாரணப் பணிகள் இருப்பதால் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா கலந்து கொள்ளவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதில் டிஆர் பாலு பங்கேற்கிறார். இந்நிலையில் பிடிபி தலைவர் மெஹபூபா முப்தியும் கலந்து கொள்ளவில்லை.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளில் காலை தொடங்கி நடந்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. பிஹார்- 35.65%, சண்டிகர்- 40.14%, இமாச்சலப் பிரதேசம்- 48.63%, ஜார்கண்ட்- 46.80%, ஒடிஷா- 37.64%, பஞ்சாப்- 37.80%, உத்தரப் பிரதேசம்- 39.31%, மேற்குவங்கம்- 45.07% வாக்குகளும், ஒடிஷா சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவில் 37.64% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், இன்றிரவு 10 மணிக்கு போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லவுள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடந்த 2 முறை பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் இந்தப் பயணம் ரத்தானால், ஜூன் 2, 5, 6 ஆகிய தேதிகளில் விண்ணுக்கு அனுப்பப்படுவார். ஒரு வார காலம் விண்வெளி மையத்தில் தங்கி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்றும், இத்துடன், நாளை (ஜூன் 2) வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய உள்ளதாகத் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 5 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்னும் 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட, உடல் ரீதியாக தயாராக இருப்பதாக RCB வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். IPL ஓய்வு குறித்து மனம் திறந்த அவர், இதற்கு மேல் தன்னை கிரிக்கெட்டிற்கு அர்ப்பணிக்க மனதளவில் தயாராக இல்லை என்றும், மேலும், கிரிக்கெட் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றும் கூறினார். மேலும், காயம் காரணமாக ஒரு போட்டியை கூட இதுவரை தவறவிட்டதே இல்லை எனப் பெருமிதம் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.