News June 1, 2024

INDIA TODAY: பாஜக 23 – 25 தொகுதிகளில் வெல்லும்

image

கர்நாடகாவில் பாஜக 23 – 25 தொகுதிகளில் வெல்லும் என INDIA TODAY நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. JDS 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 – 5 தொகுதிகளிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

NEWS 18: கேரளாவில் UDF வெற்றி

image

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான UDF 15 முதல் 18 தொகுதிகளை வெல்லும் என்று நியூஸ் 18 தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான LDF கூட்டணி 2 முதல் 5 தொகுதிகளை வெல்லும் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 முதல் 3 தொகுதிகளை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

NDTV: மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்

image

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணி 353 – 368 இடங்களை பெறும் என NDTV வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் INDIA கூட்டணி 118 – 133 இடங்களையும், மற்றவை 43 – 48 இடங்களையும், வெல்லலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

INDIA TODAY: திமுக 33 – 37 தொகுதிகளில் வெல்லும்

image

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்தியா டுடே செய்தி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, INDIA கூட்டணி 33 – 37 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் NDA கூட்டணி 2 – 4 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 0 – 2 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

REPUBLIC: பாஜக அமோக வெற்றி பெறும்

image

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணி 359 இடங்களை பெறும் என REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் INDIA கூட்டணி 154 இடங்களிலும், மற்றவை 30 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

News June 1, 2024

NEWS 18: தமிழகத்தில் திமுக வெற்றி

image

நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி 36 முதல் 39 தொகுதிகளை வென்று அபார வெற்றி பெறும் என்று நியூஸ் 18 கணித்துள்ளது. பாஜக 1 முதல் 3 தொகுதிகளை வெல்லும் என்றும் அதிமுக அதிகபட்சமாக 2 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

பாஜகவிற்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை: திமுக

image

மக்களவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களிலும் திமுக வெற்றி பெறும் என்றார். காய்ச்சல் காரணமாக INDIA கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என விளக்கம் அளித்த அவர், பாஜகவிற்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

image

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடர் ஐரோப்பிய லெக்கின் 5ஆவது லீக் போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது. லண்டனில் நடைபெற்ற நடந்த ஆடவர் அணிகளுக்கு இடையிலான போட்டியில், நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணியை இந்திய ஹாக்கி அணி 0-3 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்-2024க்கு முன்னேற வேண்டுமென்ற இந்திய வீரர்களின் நம்பிக்கையை இரட்டிப்பாகியுள்ளது.

News June 1, 2024

Exit Poll விவாதத்தில் பங்கேற்க முடிவு

image

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் விவாதங்களில் பங்கேற்க INDIA கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. டெல்லியில் நடைபெற்ற அந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் பங்கேற்காது என அக்கட்சி தலைவர் கார்கே கூறியிருந்த நிலையில், தற்போது தங்களின் முடிவை காங்கிரஸ் கட்சி மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 1, 2024

INDIA கூட்டணி 295 இடங்களில் வெல்லும்: கார்கே

image

INDIA கூட்டணி 295 இடங்களில் வெல்லும் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற INDIA கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், தேர்தலை எதிர்கொண்ட விதம் குறித்தும், தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்புகள் குறித்தும் கூட்டத்தில் விவாதித்தாக அவர் தெரிவித்தார். INDIA கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!