India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.
நேற்று மாலை நடைபெற்ற இந்தியன் 2 படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் சிம்பு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தேர்தல் சமயத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். ஷூட்டிங்-ஐ கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. இப்போது கூட ‘தக் லைஃப்’ பட ஷூட்டிங்கில் இருந்துதான் வருகிறேன். உலகிலேயே அதிக கஷ்டப்படும் ஆள் நான்தான்” என்று பேசினார்.
கோவை மருதமலை பகுதியில் தாய் யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் குட்டி பரிதவித்து வருகிறது. கிரேன் உதவியுடன் தாய் யானை நிற்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நேற்று மதியம் குட்டி தனியாக காட்டுக்குள் சென்றது. பின்னர், நள்ளிரவில் மற்ற யானைகளை அழைத்துக் கொண்டு தாய் யானையை குட்டி பார்க்க வந்த வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. தாய் யானை தானாக நிற்கும் வரை சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு 1964 மே 27ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து இடைக்கால பிரதமராக காங்கிரஸ் எம்பி குல்சாரிலால் நந்தா மே 28ஆம் தேதி முதல் ஜுன் 9ஆம் தேதி வரை 13 நாள் பதவி வகித்தார். பின்னர் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி 1966 ஜன. 11இல் மரணமடையவே, குல்சாரிலால் நந்தா மீண்டும் ஜன.12- 24 வரை 13 நாள்கள் பதவி வகித்தார். அதாவது 2 முறையும் 13 நாள்கள் பிரதமராக பணியாற்றினார்.
சென்னையில் யாராவது தாய்ப்பால் விற்பது தெரியவந்தால் உடனே புகார் அளிக்குமாறு மக்களிடம் உணவுப் பாதுகாப்புத் துறை கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் மாதவரத்தில் தாய்ப்பால் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார். அரசு மருத்துவமனைகளில் இருந்து அவர் தாய்ப்பாலினை வாங்கி வெளியே அதிக விலைக்கு விற்றது தெரிய வந்தது. தாய்ப்பால் விற்பனைக்கு தடை இருக்கும் நிலையில், சாட்டையை சுழற்றி வருகிறது தமிழக அரசு.
திருப்பதி கோயிலில் 65 வயது முதியோர் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக காலை 10, மதியம் 3 மணிக்கு 2 இடங்களை தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது. இதில் சென்று தரிசனம் செய்யலாம். இதற்கு எஸ்-1 கவுண்டரில் ஒருவர் புகைப்பட அடையாளத்துடன் கூடிய வயது சான்றிதழை சமர்பிக்க வேண்டும். பிறகு தட்சிணமட தெருவில் நம்பி கோயில் அருகில் உள்ள நுழைவு வாயிலில் பதிவு செய்ய வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2026 தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இதற்கான பணிகளை 2024 தேர்தலுக்குப் பின் தொடங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தேர்தல் நிறைவடைந்திருப்பதால் முழுநேர அரசியலில் விஜய் இறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்டுகளை உடைத்து களத்தில் இறங்கி மக்களை சந்திக்க தயாரா விஜய்?
அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளியிலேயே வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 1-12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி, ஊக்க தொகைகள் வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாணவருக்கு தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் வங்கி கணக்குகள் தொடங்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருப்பதாகவும், குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். எனினும், அவர் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் என்றும் அதற்குள் ஆந்திரா புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுவரை ஆந்திரா புதிய தலைநகரை முடிவு செய்யவில்லை. இருப்பினும், 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால் ஆந்திரா – ஹைதராபாத் இடையேயான உறவு இன்றோடு முறிந்தது.
Sorry, no posts matched your criteria.