India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்று கூறியுள்ள அவர், கருத்துக்கணிப்புகள் தற்போது கருத்து திணிப்புகளாக மாறியுள்ளதாக விமர்சித்துள்ளார். பாஜகவின் போலி பரப்புரைகளை முறியடித்து ஜூன் 4இல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெல்லும் எனவும் கூறியுள்ளார்.
*புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின், இதயத்துடிப்பை அதிகரிக்க செய்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். *ரத்த நாளங்களை சுருங்கச் செய்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. *புகையிலைப் பொருட்களின் புகையில் கார்பன் மோனாக்சைடு உடலில் ஆக்சிஜன் அளவை குறைக்கும். *தமனிகளில் அடைப்பை உருவாக்கி, ரத்த உறைவு பிரச்னையை உண்டாக்கும். *தொடர்ந்து புகைப்பிடித்தால், மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் கடும் வெயில் சுட்டெரிப்பதால், மதிய வேளைகளில் தேவையின்றி உணவு ஆர்டர் செய்ய வேண்டாம் என்று டெலிவரி நிறுவனமான ஜோமாட்டோ X பதிவு செய்திருந்தது. இதற்கு ரியாக்ட் செய்து வரும் நெட்டிசன்கள், “மதிய உணவினை இரவிலா ஆர்டர் செய்ய முடியும்?” என்று கேலி செய்து வருகின்றனர். உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் மதிய சேவைகளை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் கமெண்ட்டுகள் வந்து குவிகின்றன.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறிய நிலையில், 4வது வீரராக களமிறங்கிய Sese Bau அரை சதம் விளாசி அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரஸ்ஸல், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
*மேஷம் – முயற்சி செய்ய வேண்டிய நாள்
*ரிஷபம் – ஆக்கப்பூர்வமான நாள்
*மிதுனம் – தானம் செய்வதால் நன்மை
*கடகம் – பக்தி அதிகரிக்கும்
*சிம்மம் – நிறைவான நாள்
*கன்னி – உதவி கிடைக்கும்
*துலாம் – நம்பிக்கை அதிகரிக்கும்
*விருச்சிகம் – பாராட்டு கிடைக்கும்
*தனுசு – தடங்கல் உண்டாகும்
*மகரம் – சாதனை படைக்கும் நாள் *கும்பம் – ஆதாயம் உண்டாகும் *மீனம் – சுகமான நாள்
கர்நாடக எம்பி பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் வழக்கில், அவர் மீதான குற்றத்தை நிரூபிக்க ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை சிறப்பு புலனாய்வுக் குழு நாடவுள்ளது. புகாருக்கு உள்ளான ஆபாச வீடியோக்கள் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஐபோனில் எடுக்கப்பட்டவை என காவல்துறை நம்புகிறது. ஆனால், தனது ஃபோன் தொலைந்து விட்டதாக அவர் கூறியதால், அந்த தகவல்கள் ஐகிளவுட்டில் சேமிக்கப்பட்டுள்ளதா? என காவல்துறை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
கருத்துக்கணிப்புகளை ‘கார்பரேட் விளையாட்டு’ என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். தொலைக்காட்சி நிறுவனங்கள் தேர்தல் கருத்துக்கணிப்பை இலவசமாக நடத்தியதா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், INDIA கூட்டணி 295 முதல் 310 இடங்களில் கட்டாயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். உ.பி, பிஹார் உள்ளிட்ட இடங்களில் பாஜகவுக்கு அதிர்ச்சி தருமளவுக்கு முடிவுகள் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
*இரவில் காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை நெஞ்செரிச்சலை தூண்டி, தூக்கமின்மைக்கு வழி வகுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். *கொழுப்பு நிறைந்த மற்றும் எண்ணெய்யில் வறுத்த இறைச்சி உள்ளிட்ட உணவுகள் இரவில் சாப்பிட வேண்டாம். இந்த உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். *டீ, காஃபி, மது உள்ளிட்டவற்றை குடிக்க கூடாது. இவற்றை அருந்துவதால் தூக்க சுழற்சி பாதிப்படையும்.
சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களில் எஸ்கேஎம் கட்சி வெற்றிபெற்று, பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல்வராக தேர்வாகவுள்ளார். இத்தேர்தலில் 5 முறை முதல்வராக இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி தலைவர் பவன் குமார், தான் போட்டியிட்ட போக்லோக் கம்ராங், நாம்செய்பங் ஆகிய 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளார். 8 முறை எம்எல்ஏவாக இருந்த அவர், 1994 – 2019 வரை தொடர்ந்து 24 ஆண்டுகள் முதல்வராக இருந்தார்.
விக்கெட் கீப்பிங் செய்வதில் சஞ்சு சாம்சனை விட ரிஷப் பந்த் சிறந்தவர் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் கடைசி கட்டத்தில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடவில்லை என்ற கூறிய அவர், வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் கிடைத்த வாய்ப்பையும் அவர் தவற விட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 1 ரன்னில் அவுட்டானார்.
Sorry, no posts matched your criteria.