News June 2, 2024
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 137 ரன்கள் இலக்கு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறிய நிலையில், 4வது வீரராக களமிறங்கிய Sese Bau அரை சதம் விளாசி அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரஸ்ஸல், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Similar News
News July 10, 2025
‘கார்த்தி 29’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

கார்த்தியின் 29-வது படத்தை ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்குகிறார். கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக இது உருவாக உள்ளது. இதில் பிரபல தெலுங்கு நடிகர் நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். படத்தில் வில்லனாக நிவின் பாலியும், கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷனும் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் நாளை பூஜையுடன் தொடங்கவுள்ளது.
News July 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஜூலை 10 – ஆனி 26 ▶ கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: பவுர்ணமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ பிறை: வளர்பிறை.
News July 10, 2025
கணிக்க முடியாத கேம் சினிமா: இயக்குநர் ராம்

ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ என்ற படம் 4-ம் தேதி வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேசிய ராம் ‘பறந்து போ’ சிறப்பு காட்சியை பார்த்தவர்கள், ராமின் காமெடியை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார். சினிமா என்பது கணிக்க முடியாது கேம் என கூறிய அவர் இப்படியும் நடக்கலாம், அப்படியும் நடக்கலாம் என்றார்.