India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு, தொழிலதிபர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் தனது நிறுவனங்கள் உற்சாகமாக பணி செய்ய ஆவலுடன் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, எலான் மஸ்க்கின் இந்திய பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி, மழையால் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (ஜூன் 9) நியூயார்க்கில் நடைபெறும் இப்போட்டிக்காக, கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், டாஸ் அல்லது போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஆகலாம் எனத் தெரிகிறது.
* மேஷம் – ஆர்வத்துடன் செயல்படுங்கள், *ரிஷபம் -தோல்வி ஏற்படும், *மிதுனம் – பயம் உண்டாகும் , *கடகம் – பெருமையான நாளாக அமையும், *சிம்மம் – அச்சம் ஏற்படும், *கன்னி – உதவி தேவைப்படும், *துலாம் – கோபம் வேண்டாம், *விருச்சிகம் – யோகம் வரும், *தனுசு – சோதனையான நாள், *மகரம் – ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள், *கும்பம் – பரிவு உண்டாகும், *மீனம் – நன்மை ஏற்படும்.
உத்தவ் தாக்கரே பாஜகவுடன் சேர மாட்டார் என தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் கட்சி) மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார். தேர்தலுக்கு பிறகு உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசிய தாக தெரிவித்த அவர், எந்த காரணம் கொண்டும் அவர் பாஜக அணிக்கு செல்ல மாட்டார் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற INDIA கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் உத்தவ் கலந்துகொள்ளாமல், சஞ்சய் ராவத்தை அனுப்பியிருந்தார்.
தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைபெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேலூர், காஞ்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கரூர், தி.மலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை, குமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, வெளியே இருந்தால், உடனே வீட்டிற்கு விரைவாக செல்லவும்.
கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீதான விசாரணையை 14ஆம் தேதிக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக கெஜ்ரிவால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் ஜாமினுக்கு, அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தை பெண் காவலர் குல்வீந்தர் கவுர் கன்னத்தில் அறைந்தார். விவசாயிகளை பற்றி கொச்சையாக பேசியதற்காக அறைந்ததாக காவலர் விளக்கம் அளித்த நிலையில், அவர் மீது FIR பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் அவருக்கு வேலை தருவதாக பிரபல பாடகர் விஷால் தட்லானி தெரிவித்துள்ளார். வன்முறையை தான் எப்போதும் ஆதரிப்பதில்லை எனவும், ஆனால் பெண் காவலரின் கோபம் நியாயமானது என அவர் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில், நாளை 4 போட்டிகள் நடைபெற உள்ளன. காலை 5 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளும், 6 மணிக்கு நடைபெறும் 2ஆவது போட்டியில் இலங்கை – வங்கதேசம் அணிகளும், இரவு 8 மணிக்கு நடைபெறும் 3ஆவது போட்டியில் தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகளும், 10.30 மணிக்கு நடைபெறும் 4ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.
விடுமுறையை கருதி, வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் நாம் அதிக நேரம் இரவில் விழித்திருக்க தூண்டப்படலாம். ஆனால், வாரம் முழுவதும் ஒரே மாதிரியான தூக்க நேரத்தை கடைப்பிடிப்பது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரே மாதிரியான தூக்க நேரத்தால், உடலானது புத்துணர்ச்சியாக இருக்கும் எனவும், இரவு நேர கண் விழிப்பு, வளர்சிதை மாற்ற கோளாறு மற்றும் இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.
முறைகேடுகளும், குளறுபடிகளும் நிறைந்த நீட் தேர்வு முறையினை ரத்து செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் வென்றுள்ள திமுக, நாடாளுமன்றத்தில் அவர்களின் பலத்தைப் பயன்படுத்தி, நீட் தேர்வை ரத்து செய்ய இனியாவது ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.