News June 7, 2024
விடுமுறை நாள்களில் விழித்திருக்க வேண்டாம்!

விடுமுறையை கருதி, வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் நாம் அதிக நேரம் இரவில் விழித்திருக்க தூண்டப்படலாம். ஆனால், வாரம் முழுவதும் ஒரே மாதிரியான தூக்க நேரத்தை கடைப்பிடிப்பது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரே மாதிரியான தூக்க நேரத்தால், உடலானது புத்துணர்ச்சியாக இருக்கும் எனவும், இரவு நேர கண் விழிப்பு, வளர்சிதை மாற்ற கோளாறு மற்றும் இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.
Similar News
News July 9, 2025
நடிகர் ஃபிஷ் வெங்கட் உடல்நிலை கவலைக்கிடம்

நடிகர் ஃபிஷ் வெங்கட்டின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவரின் மகள் தெரிவித்துள்ளார். இதுவரை சிகிச்சை பெற்ற ஹாஸ்பிடலில் இருந்து வேறு ஹாஸ்பிடலுக்கு அவர் மாற்றப்பட்டு இருப்பதாகவும், நன்கொடையாளர்கள் தரும் பணத்தை வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட உடல்பாகம் முழுவதும் ரத்தத்தில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
News July 9, 2025
முட்டை விலை ஒரே நாளில் 20 காசுகள் சரிவு

முட்டை விலை இன்று ஒரே நாளில் 20 காசுகள் வீழ்ச்சியடைந்திருப்பது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1 முட்டையின் விலை நேற்று ₹5.75ஆக இருந்தது. இந்நிலையில் இன்று அதன் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ₹5.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 முட்டை ₹6-க்கு விற்கப்பட்டு வருகிறது. உங்கள் ஊரில் முட்டை விலை என்ன? கீழே பதிவிடுங்க.
News July 9, 2025
பட்டாசு ஆலைகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விதிமீறல்கள் நடந்திருப்பது உறுதியானால் ஆலைகளை மூடுவது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட விபத்து நடக்கக் கூடாது என திட்டவட்டமாக ஆணையம் தெரிவித்துள்ளது.