India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்குவங்க எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் சம்பளம் 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சட்டசபையில் கடந்த ஆண்டு நிறைவேறிய சம்பள உயர்வு தொடர்பான மசோதாக்களுக்கு ஆளுநர் ஆனந்த போஸ் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து எம்எல்ஏக்கள் சம்பளம் ரூ.10,000ல் இருந்து ரூ.50,000ஆகவும், அமைச்சர்களின் சம்பளம் ரூ.10,900ல் இருந்து ரூ.50,900ஆகவும், கேபினட் அமைச்சர்களின் சம்பளம் ரூ.51,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க இந்த சீசனில் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இலங்கை அணியில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். இந்த தகவல் மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு நவீன உளவுக்கப்பலை சீனா வழங்கியிருப்பது, இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா நடத்தும் பேலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை தனது உளவுக்கப்பல்கள் மூலம் சீனா கண்காணித்து வருகிறது. தற்போது பாகிஸ்தானுக்கும் அதேபோன்ற உளவுக்கப்பலை சீனா அளித்துள்ளது. இது 87 மீட்டர் நீளமுடையது. இந்தியாவிடம் இதைவிட பெரிதாக 175 மீட்டர் நீள நவீன உளவுக்கப்பல் உள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், முதல்கட்டத் தேர்தல் 19ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் 26ஆம் தேதியும் நடக்கிறது. இந்த 2 நாட்களும் வெள்ளிக்கிழமை என்பதால், இஸ்லாமியர்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும் என இந்திய முஸ்லீம் லீக் கட்சி கூறியுள்ளது. வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் மசூதிகளுக்கு செல்வார்கள் என்பதால் தேதியை மாற்றுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ரத்த ஆறு ஓடும் என மிரட்டல் விடுத்து முன்னாள் அதிபர் டிரம்ப் பேசியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில், ” அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் ரத்த ஆறு ஓடும்” என்றார். 2020ம் ஆண்டு தேர்தலில் பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் தாயார் சரண் கவுருக்கு குழந்தை பிறந்துள்ளது. 58 வயதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை, சித்துவின் தந்தை பால்கர் சிங் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சித்து கடந்த 2022இல் கொலை செய்யப்பட்ட பின், அவரது பெற்றோர்களான சரண் கவுர் (58) பால்கவுர் சிங் (60) ஐவிஎஃப் மூலம் மற்றொரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை அதிதி ராவும், நடிகர் சித்தார்த்தும் காதலிப்பதாக நீண்ட நாட்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், இருவரும் இதற்கு பதில் கூறாமல் இருந்து வருகின்றனர். ஆனால், சமூக வலைத்தளத்தில் மாறி மாறி அன்பை பொழிவதும், பொது இடங்களுக்கு ஒன்றாக செல்வதுமாக உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த பார்ட்டி ஒன்றிற்கு இருவரும் ஒன்றாக சென்ற போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளே சென்னையில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியுள்ளது. சென்னையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதேபோல், ஈரோடு மாவட்டம் குமலன்குட்டையில் பறக்கும்படை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
ஒருநாள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா அடைந்த தோல்விக்கு ரோஹித் ஷர்மாவும், டிராவிட்டுமே காரணம் என்று முகமது கைஃப் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கைஃப் அளித்துள்ள பேட்டியில், ” மந்தமான பிட்ச்சை அளித்தால், ஆஸ்திரேலியா தோற்கும் என 2 பேரும் நினைத்தனர். அதற்கு மாறாக, ஆஸ்திரேலிய அணி ஜெயித்து விட்டது. இதற்கு ரோஹித்தும், டிராவிட்டுமே காரணம்” எனக் கூறியுள்ளார்.
சிஏஏ சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இவ்விவகாரத்தில் காங்கிரஸ் முதலில் இடதுசாரிகள் பக்கம் நின்றதாக கூறிய அவர், பின்னர் நிலைப்பாட்டை மாற்றி பாஜகவுக்கு ஆதரவளித்ததாக தெரிவித்தார். மேலும் கேரளாவை சேர்ந்த 18 காங்., எம்.பிக்களில் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை என்றும் அவர் சாடினார்.
Sorry, no posts matched your criteria.