News March 18, 2024

இரவில் தூக்கம் வரவில்லையா?

image

வாழ்க்கை முறை மாற்றத்தினால் இன்றைய தலைமுறையினர் பலர் இரவில் தூக்கமின்றி தவிக்கின்றனர். அதனை சீர் செய்ய இந்த டிப்ஸ்களை முயற்சித்து பாருங்கள்
* தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுந்திருங்கள்
* படுக்கையறையை இருட்டாகவும், அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்
* தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்ஃபோன், கம்ப்யூட்டர்களில் இருந்து விடுபடுங்கள்

News March 18, 2024

தனித்து விடப்பட்டதா அதிமுக?

image

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி ஏற்கெனவே தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது. ஆனால், அதிமுக நிலை என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பி வருகின்றனர். புதிய தமிழகம் போன்ற சிறு கட்சிகள் அதிமுகவில் இணைந்துள்ள நிலையில், தேமுதிக இணையுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இதனால், இந்த தேர்தலில் அதிமுக தனித்து விடப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

News March 18, 2024

பாஜகவுக்கு என்ன லாபம்?

image

நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி சேர்வதாக பாமக அறிவித்துள்ளது. இதனால், பாஜகவுக்கு அதிகப்படியான பலன்கள் இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுகவுடனான கூட்டணியை முறித்திருப்பதால், தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது பாஜக. பாமகவின் வாக்கு சதவீதம் இணையும் போது பாஜகவுக்கு அது மிக சாதகமான முடிவுகளை கொடுக்கும்.

News March 18, 2024

பழைய ரிஷப் பண்ட்-ஐ பார்ப்பது கடினம்

image

ரிஷப் பண்ட் பழைய மாதிரி அதிரடியாக விளையாடுவது கொஞ்சம் கடினம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ரிஷப் பண்ட் முட்டிப் பகுதி இன்னும் பலம் பெற்று இருக்காது. விக்கெட் கீப்பராக பணியாற்றுவது சிரமமாக இருக்கும். எனவே ஐபிஎல் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் நாம் உண்மையான ரிஷப் பண்டை பார்க்க முடியாது. அதற்காக சில ஆட்டங்கள் நாம் காத்திருக்க வேண்டிய தேவை நிச்சயம் இருக்கும்” என்றார்.

News March 18, 2024

கனவால் வந்த வினை.. மாணவி தற்கொலை

image

தற்கொலை செய்வது போல நாள்தோறும் கனவு வந்ததை தாங்க முடியாத 12ஆம் வகுப்பு மாணவி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த மாணவி, பல நாட்களாக இந்த பிரச்னையை சந்தித்துள்ளார். இது குறித்து கடிதம் எழுதியுள்ள அவர், அடிக்கடி வரும் கனவால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே ‘3’ படத்தில் வருவது போல தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

News March 18, 2024

போதைப் பொருட்களின் தலைமை இடம் குஜராத்

image

போதைப் பொருட்களின் தலைமை இடமாக குஜராத் உள்ளதாக முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். போதைப் பொருட்கள் இந்தியா முழுவதும் குஜராத்தில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களை தடுத்து நிறுத்திவிட்டால், இந்தியா முழுவதும் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட வாய்ப்பே இல்லை. எனவே, மத்திய பாஜக அரசு குஜராத்தில் தீவிரம் காட்டி போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என அவர் கூறினார்.

News March 18, 2024

மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

image

பரப்புரைக்கு விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக பிரதமர் மீது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆந்திராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக பேரணி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தி நிகழ்ச்சிக்கு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2024

கடைசி வரை தனிமையாக வாழப் போகிறேன்

image

திருமணம் செய்து கொள்கிற எண்ணத்தை தான் கைவிட்டுவிட்டதாக நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த அவர், “25 வயதில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்போது அமையவில்லை. இப்போது எனக்கு 40 வயதாகிறது. இதன் பிறகு திருமணம் செய்யும் எண்ணமில்லை. கடைசி வரை தனிமையான வாழ்க்கைக்குப் பழகிக்கொள்ளப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.

News March 18, 2024

பாஜக-ஜேடியு கூட்டணி தொகுதிப் பங்கீடு

image

பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 17, ஜேடியு 16 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சி சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இதைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு குறித்து இரு கட்சித் தலைவர்களும் ஆலோசனை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 தொகுதிகள், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

News March 18, 2024

லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி

image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து X பக்கத்தில், வாழ்க்கை மிகவும் கடினமானது என தனது புகைப்படத்துடன் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர் ஒருவர் ஆறுதல் கூறியதற்கு, அப்படி நடக்காது என நினைப்பதாக அவர் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.