News April 18, 2025

மனித குலத்தின் அடுத்த மிகப்பெரிய நகர்வு இதுதான்!

image

பூமி அழிந்தால், மனித குலமும் அத்துடன் அழிந்துவிடும் என்ற கூற்றை திருத்தி எழுதும் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றியை பெற்று விட்டனர் USA மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள். சூரிய மண்டலத்துக்கு வெளியே இருக்கும் K2-18b எனும் கிரகத்தில் குறைந்தபட்சம் நுண்ணிய உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இக்கிரகம் சுமார் 124 ஒளி ஆண்டுகள் தொலைவில், லியோ விண்மீன் கூட்டத்தில் இருக்கிறது.

News April 18, 2025

‘என்னங்க சார் உங்க சட்டம்’ MI-யால் வெடித்த சர்ச்சை!

image

DC vs RR அணிகளுக்கு எதிரான மேட்ச்சில் DC-யின் ஸ்டார்க் back-foot no-ball வீசினார். ஆனால், அதே மாதிரியான ஒரு பந்தை KKR-க்கு எதிரான மேட்ச்சில் MI-யின் விக்னேஷ் புதூர் வீசியதற்கு நோ-பால் வழங்கப்படவில்லை. இது சர்ச்சையாகி இருக்கிறது. IPL தரப்பில் இந்த சர்ச்சைக்கு இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளிவரவில்லை. நெட்டிசன்கள், ‘MI வேலையைக் காட்ட தொடங்கிவிட்டது’ என கமெண்ட் செய்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News April 18, 2025

திறப்பு விழா காணும் விழிஞ்ஞம் துறைமுகம்

image

கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தை வரும் மே 2 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். அதானி குழுமத்தின் முதலீட்டில் உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்ட பணி 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. ஆண்டுக்கு 10 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் வகையில் கடந்த ஆண்டு முதற்கட்ட பணிகள் முடிந்தன. சர்வதேசக் கடல் பகுதியில் இருந்து வெறும் 11 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது.

News April 18, 2025

பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

*பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>www.eservices.tn.gov.in<<>> இணையதளத்திற்கு செல்லுங்கள்.* பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். *அதில் 1)மாவட்டம், 2)வட்டம், 3)கிராமம் 4)பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான்.. PLESE SHARE IT

News April 18, 2025

காலமுறை ஊதியம் வழங்குக: ஓபிஎஸ் வலியுறுத்தல்

image

வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குமாறு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். பெருமழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது இரவு, பகல் பாராமல் உழைக்கும் கிராம உதவியாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, பணியின்போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News April 18, 2025

நடுவானில் விமானத்தில் நடந்த சம்பவம்

image

மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் இருந்து சிறிய ரக விமானத்தை கத்திமுனையில் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோரோஷல் நகரில் இருந்து சுற்றுலா தலமான பெட்ரோவுக்கு 14 பயணிகள், 2 விமானிகளுடன் அந்த விமானம் புறப்பட்டது. நடுவானில் கத்திமுனையில் ஒருவர் விமானத்தை கடத்த முயன்றபோது, பயணி ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றார். கொல்லப்பட்டவர் அமெரிக்கர் என தெரியவந்தது.

News April 18, 2025

தங்கம் கையிருப்பு: 2-வது இடத்தில் இந்தியா!

image

தங்கத்தின் விலை ஆண்டு இறுதிக்குள் சவரன் ஒரு லட்சம் ரூபாயை எட்டி விடும் அளவுக்கு தினசரி உயர்ந்து வருகிறது. இதனால் சாமான்ய மக்களுக்கு இந்த மஞ்சள் உலோகம் எட்டாக் கனியாகி வருகிறது. எனினும், தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும் ஆசிய நாடுகளில் இந்தியா 2-வது இடத்தை பிடித்திருக்கிறது. மொத்தமாக இந்தியாவிடம் 854 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் இருக்கிறது. 2,263 மெட்ரிக் டன்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.

News April 18, 2025

நடிகர் ஸ்ரீயின் பரிதாப நிலை: லோகேஷ் விளக்கம்!

image

நடிகர் ஸ்ரீ நிலையை பலராலும் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அவர் போதைக்கு அடிமையாகி விட்டார், எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை என்றெல்லாம் கருத்துகள் பரவி வருகிறது. இந்த நிலையில்தான் அவர் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை இயக்குநர் லோகேஷ் வெளியிட்டுள்ளார். அதில், அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், தவறான தகவல் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News April 18, 2025

இப்படி ‘NO ball’ வழங்கியது சரியா?

image

IPL-ல் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதியின்படி, பந்து பேட்டில் படுவதற்கு முன், கீப்பரின் Gloves ஸ்டம்புக்கு முன்னால் இருந்தால், அது ‘No-ball’. இந்த விதியின் படி, நேற்று MI-யின் ரிக்கெல்டன் கேட்ச் கொடுத்து அவுட்டான போதும், ‘No-ball’ பெற்று தப்பித்தார். SRH-ன் கிளாசனின் Gloves ஸ்டம்புக்கு முன்னால் இருந்தது. இது நியாயமானது கிடையாது என பலரும் விமர்சிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News April 18, 2025

என்னய்யா நடக்குது அங்க…!

image

அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலிய பிரதமர் மெலோனியை புகழ்ந்து தள்ளியது உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. வரி விதிப்புக்குப் பின் அமெரிக்கா சென்ற மெலோனி டிரம்ப்பை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மெலோனியை தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியதுடன், இத்தாலியின் சிறந்த பிரதமர் என அடுக்கடுக்காக பாராட்டினார்.

error: Content is protected !!