India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன் தொடரில் நார்வே வீரர் கார்ல்சன் பட்டம் வென்றார். மே.வங்கத்தில் நடந்த இந்த தொடரில், பிளிட்ஸ் பிரிவு 18 சுற்றுகளாக நடந்தது. இதில் 9 வெற்றி, 8 டிரா, ஒரு தோல்வி என 13 புள்ளிகளுடன் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு ஆண்டில் அவர் வென்ற 10-வது பட்டம் இதுவாகும். ஏற்கெனவே இந்தத் தொடரின் ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
உத்தரபிரதேசத்தில் ரயிலை கவிழ்க்க நடைபெற்ற சதி முறியடிக்கப்பட்டுள்ளது. பரேலி மாவட்டத்தில் உள்ள திப்னாபூர் ரயில் நிலையத்துக்கு அருகே சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த போது, அங்குள்ள தண்டவாளத்தில் சிமெண்டு பலகை மற்றும் இரும்பு கம்பி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், அவசர பிரேக் மூலம் ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஹரியானா தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 36-29 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது. 12 அணிகள் பங்கேற்றும் இந்த தொடரில் ஹரியானா அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்பப் பெற்றுள்ளது. மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான அரசுக்கு, அக்கட்சி ஆதரவளித்து வந்த நிலையில் அக்கட்சி திடீரென விலகல் முடிவை அறிவித்துள்ளது. மாநிலத்தில் நெருக்கடியை தவிர்க்கவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தலைவர் சங்மா, பாஜக தலைவர் நட்டாவுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அந்த அணி 44 ரன்கள் எடுத்திருந்தபோது போது மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
மணிப்பூர் பற்றி எரிவதை பாஜக விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். பாஜகவின் இரட்டை இஞ்சின் ஆட்சியில் மணிப்பூர் பாதுகாப்பாக இல்லை குறிப்பிட்டுள்ள அவர், அங்குள்ள மக்களின் எதிர்காலத்தை பாஜகவின் அமைதி அழித்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். துயரத்தின் போது தங்கள் மாநிலத்துக்கு வராத மோடியை மக்கள் எதிர்காலத்திலும் மணிப்பூருக்கு வர அனுமதிக்க மாட்டார்கள் எனவும் சாடியுள்ளார்.
ஆசிய மகளிர் ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 47 மற்றும் 48ஆவது நிமிடங்களில் தீபிகாவும், 37ஆவது நிமிடத்தில் துணை கேப்டன் நவ்நீத் கவுரும் கோல் அடித்தனர். இதனால், 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. 5 வெற்றிகளுடன் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், அரையிறுதியில் மீண்டும் ஜப்பானை எதிர்கொள்கிறது.
இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இப்படத்தை T Creations சார்பில் திருமலை தயாரித்துள்ளார். படம் நவ.15 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படம் நவ. 22இல் வெளியாகவுள்ளது.
கழுத்தைச் சுற்றி கரும்படலம் ஏற்படும் நிலையில், அதை அழுக்கு என நினைத்து சிலர் சோப் போட்டு கழுவுவார்கள். சிலர் கிரீம் போடுவார்கள். ஆனால் உண்மையில் அது அழுக்கு அல்ல. இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் காரணமாக ஏற்படும் பிரச்னை தான் கரும்படலம் ஏற்பட காரணமாகிறது. இந்த குறைபாடு காரணமாக கழுத்து, அக்குள் பகுதிகளில் கரும்படலம் ஏற்படுகிறது. மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறுவதே இதற்கு சரியான தீர்வாகும்.
AUS வீரர்கள் கூறும் கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பதில் தவறில்லை என கங்குலி தெரிவித்துள்ளார். ரிக்கி பாண்டிங் விமர்சனத்துக்கு கம்பீரின் பதிலடி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ஆஸி. வீரர்கள் எப்போதும் அப்படிதான் பேசுவார்கள், அவர்களின் பாணியிலேயே கம்பீர் பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். முன்னதாக கோலி, ரோஹித் ஃபார்ம் பற்றி பாண்டிங் பேசியதற்கு கம்பீர் கடும் எதிர்வினையாற்றி இருந்தார்.
Sorry, no posts matched your criteria.