News October 24, 2025

தீபாவளி சோகம்: 30 குழந்தைகள் பார்வை இழப்பு?

image

தீபாவளியில் கார்பைடு துப்பாக்கி வைத்து கொண்டாடிய 30 குழந்தைகள் <<18082464>>பார்வையை இழக்கும்<<>> அபாயம் உள்ளதாக ம.பி. அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த 30 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 300 பேர் தீவிர கண் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நேற்று 14 குழந்தைகள் பார்வையை இழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

News October 24, 2025

நடிகர் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டாரா?… CLARITY

image

நடிகர் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. அவரது மகள் ஜோவிடாவின் இன்ஸ்டா பதிவுக்கு விஜய் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்ததே அதற்கு காரணம். தந்தை லிவிங்ஸ்டனுடன் இருக்கும் வீடியோவை ஜோவிடா பதிவிட, ‘உங்க அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறாரா?’ என அவர் கேட்டார். இதனால் கடுப்பான ஜோவிடா, நீங்களும் உங்கள் குடும்பமும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததாக அல்லவா நினைத்தேன் என பதிலடி கொடுத்துள்ளார்.

News October 24, 2025

கவின் ஆணவக் கொலை: குற்றப்பத்திரிக்கை தயார்

image

காதல் விவகாரத்தில் நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் வழக்கில், CBCID போலீசார் குற்றப்பத்திரிக்கையை தயார் செய்துள்ளனர். அடுத்த ஓரிரு நாள்களில் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தையும் போலீஸுமான சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய மூவரும் கைதாகி நீதிமன்ற காவலில் உள்ளனர்.

News October 24, 2025

குழந்தைகளுக்கு Diaper மாட்டும் பெற்றோர்களே உஷார்!

image

வீட்டில் இருக்கும்போது கூட குழந்தைகளுக்கு Diaper மாட்டும் பழக்கம் வந்துவிட்டது. அதில் அவர்கள் ஒருமுறை சிறுநீர் கழித்தால் கூட Diaper-ஐ மாற்ற வேண்டும் என டாக்டர்கள் சொல்கின்றனர். இல்லையென்றால் அதனால் ஏற்படும் நோய் தொற்றால், Urinary Infection-ல் தொடங்கி, சில சமயங்களில் சிறுநீரகம் வரை நோய் தொற்றும் பரவ வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

News October 24, 2025

திங்கள்கிழமை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

image

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27-ம் தேதி ( திங்கள்கிழமை) விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவ்விழாவிற்காக தமிழகம் முழுவதும் ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

News October 24, 2025

1 விநாடிக்கு 600 GB வேகம்: ஸ்டார்லிங்க் பணிகள் துரிதம்

image

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் அதிவேக இண்டர்நெட் சேவையை தொடங்க தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக மும்பை, லக்னோ, ஐதராபாத் உள்ளிட்ட 9 நகரங்களில் சிக்னல் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 விநாடிக்கு 600 GB வேகத்தில் இண்டர்நெட் சேவை கிடைக்கும் என கூறப்படுகிறது.

News October 24, 2025

BREAKING: புதிய கட்சி தொடங்கினார்

image

யாதவ மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜாராம், புதிய கட்சியை தொடங்கியுள்ளார். திருத்தணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியதாக அவர் அறிவித்தார். மேலும், கட்சியின் லோகோவையும் ராஜாராம் அறிமுகம் செய்து வைத்தார். 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட உள்ளார்.

News October 24, 2025

நாட்டிற்காக களமிறங்கிய கிரிக்கெட் வீரர்கள்

image

பல்வேறு நட்சத்திரங்கள் நாட்டிற்கு சேவை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் மைதானத்தை கடந்து, காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளாக மாறியுள்ளனர். அவர்கள் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 24, 2025

தீபாவளியில் ISIS தாக்குதல்: திட்டம் முறியடிப்பு

image

தீபாவளியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததை டெல்லி போலீசார் முறியடித்துள்ளனர். இதுதொடர்பாக 2 ISIS பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் மால் மற்றும் பூங்காவில், அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News October 24, 2025

சற்றுமுன்: பிரபலம் காலமானார்

image

பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் மலேசியா பாஸ்கர் காலமானார் . பாடிகார்ட், சாம்ராஜ்ஜியம், பாக்ஸர், உள்பட 250+ மலையாள படங்களிலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். திரையில் ‘Fight – Malaysia Bhaskar’ என்று பார்த்ததுமே ரசிகர்களின் கைத்தட்டல், விசில் பறக்கும் அளவுக்கு மலையாளத்தில் பிரபலமான இவர், மலேசியாவில் தமிழ் படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.

error: Content is protected !!