India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், மிடில் கிளாஸ் மக்களின் சுமையை குறைக்க, நிவாரணத் திட்டங்களை அறிவிக்குமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு X-ல் பயனர் ஒருவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு மோடியின் அரசு மக்கள் குரலுக்கு செவி சாய்க்கும் எனவும், உங்களின் கோரிக்கை அங்கீகரிக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிச.31க்குள் E-MAIL I.D. உருவாக்கித் தர அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில், பொறியியல், பாலிடெக்னிக், தொழிற்கல்வி, கல்லூரிகளில் சேரவும், பாடத் திட்ட தகவல்கள், தேர்வுகள், விடுதிகள், சுற்றறிக்கை பெறவும் மாணவர்களுக்கு E-MAIL I.D. உருவாக்கித் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. E-MAIL குறித்து பயிற்சி அளிக்கவும் கேட்டுள்ளது.
தெலுங்கு மொழி பேசுவோரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கஸ்தூரியை 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது நடைபெற்ற விசாரணையின்பாேது, தனது மகளை கவனிக்க தாம் மட்டுமே இருப்பதாகக் கூறி ஜாமின் அளிக்க வேண்டுமென கஸ்தூரி கோரியதாகக் கூறப்படுகிறது. அதேபோல், சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டாம் என கெஞ்சியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல், கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சியின் பெயரையா வைப்பது என உதயநிதி வினவியுள்ளார். 3 மாதங்களுக்கு முன் பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என இபிஎஸ் சொன்னார். ஆனால், சேலத்தில் ரெய்டு நடந்த மறுநாளே, கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் பேசலாம் என்கிறார். இன்னும் ஒரு ரெய்டு விட்டால் அதிமுகவை பாஜகவுடன் இணைத்துவிடுவார் எனவும் உதயநிதி கலாய்த்துள்ளார்.
தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அண்மையில் விக்கிரவாண்டி அல்லது நாகை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடக் கூடும் என மாவட்ட தலைவர் சிவா கூறியுள்ளார். ஆனால் தவெக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் ஹைதராபாத்தில் நேற்று கைது செய்தனர். இன்று அவர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் நடிகை கஸ்தூரிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், ’கஸ்தூரியின் கைது பழிவாங்கும் நடவடிக்கை, அவரை மட்டும் தனிப்படை அமைத்து கைது செய்தது உள்நோக்கம் கொண்டது’ என கூறினார்.
IND-AUS இடையிலான முதல் BGT டெஸ்ட் போட்டி வரும் நவ.22ஆம் தேதி பெர்த்தில் தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டியில் போது பந்து முழங்கையில் பலமாக தாக்கியதில் IND வீரர் கே.எல்.ராகுல் காயமடைந்தார். இந்நிலையில் அவர் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பயிற்சி போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் கில் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என BCCI தெரிவித்துள்ளது.
டெல்லி ஆம் ஆத்மி மூத்த அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அதேபோல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் அவர் விலகியுள்ளார். இதுதொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கட்சி தோல்வி அடைந்து விட்டதாகவும், மக்களுக்கு சேவை என்பதிலிருந்து விலகி அரசியல் நோக்கங்களுக்கு கட்சி திரும்பி உள்ளதாகவும் சாடியுள்ளார்.
சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்கையில் அதற்கு தனுஷ்தான் காரணமென்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுவதுண்டு. இந்நிலையில், திருமண ஆல்பத்தில் “நானும் ரவுடிதான்” படத்தின் வீடியோவை பயன்படுத்திய விவகாரத்தில் தனுஷ் மீது முன்னணி நடிகை நயன்தாரா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு தனுஷ் தரப்பில் பதிலோ, விளக்கமோ இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால் சினிமா வட்டாரத்தில் இதுவும் சர்ச்சையாக மாறியுள்ளது.
தனுஷ்- நயன்தாரா விவகாரம் விவாதப் பொருளாக மாறியிருப்பது திமுகவின் திசைதிருப்பும் வேலை என ADMK நிர்வாகி காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டியுள்ளார். இவர்களின் சண்டை பற்றி பேசுவதுதான் நாட்டிற்கு முக்கிய தேவையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், PTR சைலண்ட் மோடுக்குச் சென்றதால் மக்கள் திண்டாடுவதாகவும், ஒரு செங்கலை வைத்து உதயநிதி ஏமாற்றிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.