News April 20, 2025

மூன்றரை மாதங்களில் 1 சவரன் தங்கம் ₹14,360 அதிகரிப்பு

image

கடந்த ஜன. 1-ம் தேதி 1 கிராம் தங்கம் ₹7,150 ஆகும். அதேபோல், 1 சவரன் தங்கம் ₹57,200 ஆகும். இந்த விலை கடந்த மூன்றரை மாதங்களில் கிடுகிடுவென அதிகரித்து வந்தது. அதன்படி இன்று 1 கிராம் ₹8,945ஆகவும், 1 சவரன் தங்கம் ₹71,560ஆகவும் விற்கப்படுகிறது. அதாவது 1 கிராம் தங்கம் விலை ₹1,795 அதிகரித்துள்ளது. அதேபோல், 1 சவரன் தங்கம் ₹14,360 உயர்ந்துள்ளது. வரும் நாள்களில் மேலும் உயரும் எனக் கூறப்படுகிறது.

News April 20, 2025

அதிமுகவில் இணைந்த தவெக மூத்த தலைவர்

image

தவெக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் முள்ளிமுனை P.P.ராஜா அதிமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். விஜய் கட்சி தொடங்கி இன்னும் தேர்தலையே சந்திக்காத நிலையில், தவெக கட்சியிலிருந்து சிலர் விலகுவதும், கட்சிப் பொறுப்புக்கு பணம் வாங்குவதாக புகார் எழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 20, 2025

வீடியோ காலில் வந்த நிர்வாண பெண்.. பறிபோனது ரூ.20,000

image

மும்பை தனியார் நிறுவன மேலாளருக்கு, டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண், வீடியோ காலில் நிர்வாணமாக வந்துள்ளார். அவரையும் நிர்வாணமாக நிற்கும்படி கூற, அந்நபரும் செய்துள்ளார். இதை ரெக்கார்ட் செய்த பெண், மிரட்டி முதலில் ரூ.20,000 பறித்துள்ளார். பின்னர் ரூ.30,000 கேட்டுள்ளார். மறுக்கவே உறவினர்களுக்கு நிர்வாண வீடியோவை அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.

News April 20, 2025

ஆன்மீக பயணத்தில் சூர்யா.. வைரலான புகைப்படங்கள்

image

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படம் மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் மகாராஷ்டிராவின்
கோலாப்பூரில் உள்ள மகாலக்ஷ்மி கோயிலில் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் பிரார்த்தனை செய்தனர். அங்கு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

News April 20, 2025

இனி இதை பழக்கப்படுத்திக்கோங்க

image

வெயிலை சமாளிக்க, சம்மர் சீசன் முடியும் வரை.. தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்க ‣நொறுக்கு தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை உட்பட பழங்களை சாப்பிடுங்க ‣வாரம் இருமுறை ஆயில் பாத் எடுங்க ‣வெளியே செல்லும்போது குடையும், தண்ணீரும் வெச்சிக்கோங்க ‣காட்டன் ஆடைகளை அணியுங்க ‣காரமான உணவுகளை தவிர்க்கவும்

News April 20, 2025

பெண் ஆட்டோ ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை!

image

உ.பி.யில் பெண் ஆட்டோ டிரைவரை துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவில் 36 வயது பெண் டிரைவர், ஓட்டி வரும் ஆட்டோவில் இருவர் ஏறினர். ராணுவ வீரர்கள் என அறிமுகம் செய்து கொண்டவர்கள், டிரைவரின் மகளுக்கு ராணுவப் பள்ளியில் அட்மிஷன் வாங்கித் தருவதாக நம்ப வைத்தனர். பின் ஹோட்டலுக்கு வரவழைத்து, துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துவிட்டு தப்பினர்.

News April 20, 2025

இத்தாலி சிறையில் கைதிகளுக்கு பாலியல் அறை

image

இத்தாலியில் கைதிகள், துணையுடன் உடலுறவில் ஈடுபட பாலியல் அறை திறக்கப்பட்டுள்ளது. மத்திய உம்பிரியாவை சேர்ந்த கைதி, காதலியை தனிமையில் சந்திக்க அனுமதி கோரி கோர்ட்டை நாடினார். விசாரித்த கோர்ட் சிறைக் கைதிகள் தங்களது வாழ்க்கை துணை (அ) நீண்டகால காதலர்களை 2 மணி நேரம் தனிமையில் சந்திக்க அனுமதித்துள்ளது. ஏற்கனவே பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், ஸ்பெயினில் இது நடைமுறையில் உள்ளது.

News April 20, 2025

BREAKING: பதவி விலகலை வாபஸ் பெற்றார் துரை வைகோ

image

மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து துரை வைகோ நேற்று விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து இன்று நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் அவரது பதவி விலகல் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் துரை வைகோவின் பதவி விலகலை மதிமுக நிர்வாகக்குழு நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிர்வாகிகள் வலியுறுத்தலை அடுத்து, பதவி விலகலை வாபஸ் பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.

News April 20, 2025

கோர்ட்டுக்கே மிரட்டல்.. பாஜக MP-க்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு

image

SC-ஐ அவமதித்து பேசியதாக பாஜக MP-க்கள் <<16157597>>நிஷிகாந்த் துபே<<>>, தினேஷ் ஷர்மாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. கோர்ட்டை மிரட்டிவரும் தங்கள் கட்சி MP-க்களை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என அசாதுதீன் ஓவைசி கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் SC-ஐ பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக காங். குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், இது பாஜக MP-க்களின் சொந்த கருத்து என நட்டா கூறியிருந்தார்.

News April 20, 2025

CPI கட்சி மூத்த தலைவர் காலமானார்

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI ) திபாகர் நாயக் (72) காலமானார். அக்கட்சியின் ஓடிசா மாநில செயலாளராக பல ஆண்டுகள் அவர் பதவி வகித்துள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு குழுப்பினராகவும் இருந்துள்ளார். CPI கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘நுவா துனி’யாவின் ஆசிரியராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு மரணமடைந்தார்.

error: Content is protected !!