News November 19, 2024

விண்ணில் பாய்ந்த GSAT N-2 செயற்கைக்கோள்

image

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இஸ்ரோவின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்ஹன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் – என்2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கேப் கென்வரெல் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 4,700 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

News November 19, 2024

கஸ்தூரி என்ன தீவிரவாதியா? தமிழிசை

image

நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல் போலீசார் நடத்துவது சரியான நடவடிக்கை அல்ல என தமிழிசை குறை கூறியுள்ளார். நடிகை கஸ்தூரி தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டு நிலையிலும், போலீசாரின் நடவடிக்கை பாரபட்சமாக இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தமிழகத்தில் நிறைய இருக்கும் நிலையில், அதில் காட்டாத அக்கறையை கஸ்தூரி விஷயத்தில் காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 19, 2024

ரூ.12.41 கோடி பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை

image

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வங்கி வைப்புத்தொகை ரூ.6.42 கோடி முடக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் மார்ட்டின் வீட்டில் தொடந்து 3 நாள்கள் ED சோதனை நடத்தியது.

News November 19, 2024

‘எமர்ஜென்சி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்து, இயக்கியுள்ள இப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தணிக்கை சான்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படம் குறித்த தேதியில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி படம் வெளியாகும் என கங்கனா அறிவித்துள்ளார்.

News November 19, 2024

சட்டம் ஒழுங்கை மீட்டெடுங்கள்: அமித் ஷா

image

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துமாறு உயர் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். ஜிரிபம் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீடுகள் கொளுத்தப்பட்டன. இது தொடர்பாக அம்மாநில அதிகாரிகளுடன் 2ஆவது நாளாக ஆய்வு நடத்திய அமித் ஷா, வன்முறையை கட்டுப்படுத்த உத்தரவிட்டார்.

News November 19, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்
▶குறள் எண்: 103
▶குறள்:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
▶பொருள்: இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலை விட பெரியதாகும்‌.

News November 19, 2024

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

image

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர் அலி கேப்டனாகவும், ரோகித் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓமன் தலைநகர் மஸ்கட்டில் வரும் 26ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்திய அணியில், பிரின்ஸ்தீப் சிங், பிக்ரம்ஜித் சிங், தலேம் பிரியோபர்தா, ஷர்தானந்த் திவாரி, யோகம்பர் ராவத் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

News November 19, 2024

விரைவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்

image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதுவே இந்தியாவின் எதிர்காலத்திற்கு சரியாக இருக்கும் என்றார். வரும் 25ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.

News November 19, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் – 19 ▶கார்த்திகை – 04
▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 04:45 PM – 05:45 PM
▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM
▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM
▶குளிகை: 12:00 AM – 01:30 AM
▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
▶சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

News November 19, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!