India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏபிபி நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான கூட்டணி 150 முதல் 170 தொகுதிகளை வென்று ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 110 முதல் 130 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்றவை 8 முதல் 10 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. மகாராஷ்டிராவில் அரசியல் தலைவர், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்னும் சற்று நேரத்தில் வே2நியூஸில் கருத்துக் கணிப்புகள் வெளியாகும். காத்திருங்கள்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதுவரை இந்த தொடரில் அதிகபட்சமாக சச்சின் 9 சதங்கள் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 8 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார். இன்னும் 2 சதங்கள் அடித்தால் சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார். இத்தொடரில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெற உள்ளதால், கோலி புதிய சாதனை படைப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஜார்கண்டில் 2019 தேர்தலில் ஜேஎம்எம் 30, பாஜக 25, காங்கிரஸ் 16இல் வெற்றி பெற்றன. அப்போது India Today, Axis My India Exit pollஇல் UPA 43, பாஜக 27 இல் வெற்றி பெறும் எனவும், ABP VOTER Exit pollஇல் UPA 35, பாஜக 32 என்றும், Times Now Exit pollஇல் UPA 44, பாஜக 28இல் வெல்லும் எனக் கூறப்பட்டிருந்தது. அனைத்து Exit polls கணிப்புகளும் சரியாக இருந்தன. இன்றைய Exit polls தெரிந்து கொள்ள Way2news பாருங்க.
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடியிருப்புகளை அகற்றி மக்களை அகதிகளாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனை என TTV தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருவள்ளூர் கோலடியில், ஏரி ஆக்கிரமிப்பு என ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்ற முயல்வதாக குறிப்பிட்ட அவர், போராடும் மக்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கண்டித்துள்ளார். குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையால் தச்சுத் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மகாராஷ்டிராவில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பு காணப்பட்டாலும், வாக்காளர்களுக்கு ஆர்வமில்லாத நிலையே நீடித்ததால் வாக்குப்பதிவு அளவும் குறைந்துள்ளது. அதனால் இதுவரை மகாராஷ்டிரத்தில் மொத்த வாக்குப்பதிவு 58% ஆகவே உள்ளது. ஜார்க்கண்டில் ஓரளவு வாக்குப்பதிவு அதிகரித்து 67.59 வாக்குகள் பதிவாகியுள்ளது.
நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான அவர், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தை இருப்பதை சுட்டிக் காட்டி ஜாமின் கோரியிருந்தார். இதற்கு காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில், நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது ஆவணப்படத்தில் காட்சிகளை பயன்படுத்த NOC தந்தவர்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். நவ.18ல் வெளியான அந்த ஆவணப்படத்தில், அவர் நடித்த பல்வேறு படங்களில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், நானும் ரவுடி தான் படக்காட்சியை பயன்படுத்த தனுஷ் அனுமதி தரவில்லை. இந்நிலையில், தனுஷ் பெயரை தவிர்த்து மற்ற அனைத்து படத் தயாரிப்பாளர்களின் பெயரையும் குறிப்பிட்டு நயன் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நேரடியாக போட்டியிட்டது. இக்கூட்டணியில் பாஜக – 68, AJSU – 10, ஐக்கிய ஜனதா தள் – 2, லோக் ஜனசக்தி – 1 ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டன. இவர்களை எதிர்த்து மஹாகட்பந்தன் கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – 43, காங்கிரஸ் – 30, ராஷ்ட்ரிய ஜனதா தள் – 7, கம்யூனிஸ்ட் (ML) – 4 ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டன.
மகாராஷ்டிரா தேர்தலின் கருத்துக்கணிப்பு (EXIT POLL) முடிவுகள் இன்னும் சில நிமிடங்களில் வெளியாக உள்ளன. மொத்தமுள்ள 288 இடங்களில் மெஜாரிட்டிக்கு குறைந்தது 145 இடங்கள் தேவை. பாஜக, குடியரசுக் கட்சி (அத்வாலே), சிவசேனா (ஷிண்டே), என்சிபி (அஜித் பவார்) இணைந்து மகாயுதி கூட்டணியாகவும், காங்., சிவசேனா (உத்தவ்), என்சிபி (சரத் பவார்), சமாஜ்வாதி இணைந்து மகா விகாஸ் அகாதி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.
Sorry, no posts matched your criteria.