India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த சாக்ஷி கோச்சார் (18), இந்தியாவின் இளம் வணிக விமானத்திற்கான பைலட் லைசென்சை பெற்று சாதனை படைத்துள்ளார். 10 வயதில் பைலட் ஆக கனவு கண்ட சாக்ஷியின் பொருளாதார தடைகளை குடும்பத்தினர் தகர்த்துள்ளனர். பள்ளி படிப்பை முடித்ததும், மும்பையில் உள்ள ஸ்கைலைன் ஏவியேஷன் கிளப்பில் பயிற்சி பெற்றுள்ளார். பின்னார் அமெரிக்காவில் தேர்ச்சி பெற்ற பின், Commercial Pilot’s License-ஐ பெற்றார்.
அமெரிக்காவில் 8-ம் வகுப்பு படித்த 14 வயது மாணவனுடன் உறவுகொண்ட ஆசிரியைக்கு 30 ஆண்டு சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின், குற்றத்தை ஒப்புக்கொண்டு ஆசிரியை மன்னிப்பு கேட்டதால், அடுத்த 12 மாதங்கள் அவர் சிறையில் இருக்க வேண்டும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும், அதன்பின் 25 ஆண்டுகளுக்கு ‘பாலியல் குற்றவாளி’ பட்டியலில் வைக்கப்படுவார் எனவும் தீர்ப்பளித்தது.
தாய்லாந்தில் நண்பர்கள் 14 பேரை சயனைடு கலந்து கொலை செய்த பெண்ணுக்கு பாங்காக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2023 ஏப்ரலில் சிரிபோர்ன் கான்வாங் என்ற நபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது செல்போன், பர்ஸ் உள்ளிட்டவையும் திருடப்பட்டன. இதில் அவரது தோழியான சரரத் ரங்சிவுதபோர்ன் மீது போலீசார் சந்தேகமடைந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பணத்துக்காக 14 நண்பர்களைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
உ.பியில் மணமகன் தன்னை விட குறைவாக படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், மாப்பிள்ளை 10ம் வகுப்பு தோல்வியடைந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கூறி திருமணத்தை நிறுத்தினார். இதனையடுத்து வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகை, பணத்தை மணப்பெண் குடும்பத்தினரிடம் மணமகன் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்தனர்.
12 ராசிகளுக்கும் நாளைக்கான (நவ.22) ராசி பலன்களை தற்போது தெரிந்து கொள்வோம். ➤மேஷம் – உழைப்பு அதிகரிக்கும் ➤ ரிஷபம் – மேன்மை அடைவீர் ➤மிதுனம் – நட்பு ஏற்படும் ➤கடகம் – புகழ் கிடைக்கும் ➤சிம்மம் – நன்மை உண்டாகும் ➤கன்னி – தெளிவு கிடைக்கும் ➤துலாம் – நலம் உண்டாகும் ➤விருச்சிகம் – பரிசு கிடைக்கும் ➤தனுசு – லாபம் அடைவீர் ➤மகரம்- போட்டி ஏற்படும் ➤கும்பம் – ஓய்வு கிடைக்கும் ➤மீனம் – ஆதரவு பெருகும்.
இஸ்ரேல் PM நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவிற்கு USA எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட ICC அதிகாரம் இல்லை எனவும், கைது வாரண்ட் பிறப்பிக்கும் தவறான முடிவு கவலைகளை தருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், டிரம்ப் ஆட்சியில் USA-வின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்க உள்ள மைக் வால்சும் இதை கடுமையாக எதிர்த்துள்ளார்.
ஆர்யவீர் சேவாக், அவரது தந்தை வீரேந்தர் சேவாக்கின் கால் தடங்களை அப்படியே பின் தொடர்ந்து வருகிறார். Cooch Behar Trophy தொடரில் மேகாலயாவிற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லிக்காக விளையாடிய ஆர்யவீர், 229 பந்துகளில் டபுள் சென்சுரி விளாசியுள்ளார். 34 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என எதிரணியை ஓட விட்டுள்ளார். முதல் இன்னிங்ஸில் மேகாலயா 260 ரன்களை அடிக்க, வெறும் 2 விக்கெட்களை இழந்து டெல்லி 468 ரன்களை குவித்துள்ளது.
கயானா நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு வகுப்பெடுத்துள்ளார். இந்தியாவின் DNA-வில் ஜனநாயகம் இருப்பதாகவும், முதலில் ஜனநாயகம், முதலில் மனிதநேயம் என்பதே உலக நாடுகள் முன்னேறுவதற்கான ஒரே வழி எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உலகளவில் தற்போது மோதலுக்கான நேரமில்லை எனவும், மோதலுக்கான காரணிகளை கண்டறிந்து அகற்றுவதற்கான நேரம் எனவும் கூறியுள்ளார்.
குப்புறப்படுத்து கிடப்பது (அ) அப்படியே தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இது நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். ஆம், நீண்டநேரம் குப்புறப்படுத்துக் கிடந்தால் முதுகு, கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் வலி ஏற்படுமாம். முகத்தில் சுருக்கங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டாம். குறிப்பாக கர்ப்பிணிகள் இப்படி தூங்கக் கூடாதாம். மல்லாந்து படுத்துத் தூங்குவது தான் சிறந்ததாம். நீங்க எப்படி தூங்குறீங்க? SHARE IT.
AUS-க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி சிறப்பாக விளையாடுவார் என புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த தொடரில் கோலி ஒரு சதத்தை பதிவு செய்தால் போதும், அதன் பின் அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என கூறியுள்ளார். இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தி மொழி வர்ணனையாளராக புஜாரா செயல்பட உள்ளார். AUS-க்கு எதிராக 13 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 1352 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.