India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் நாளை கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சிகள் தினமான நவ.1ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்க இருந்தது. தீபாவளிக்கு மறுநாளான அன்று, அரசு விடுமுறை அறிவித்ததால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு கிராமசபைக் கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், ஊராட்சி இயக்குனருக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் வரும் 26ஆம் தேதி கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், 27ஆம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 28ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் மிக கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த உலகப் போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி வேலரி அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே தொடங்கிய போர், தற்போது வட கொரியா, ஈரான், சீனா, அமெரிக்கா என பெரு நாடுகளின் தலையீட்டால் மூன்றாவது உலகப் போராக மாறியிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். உக்ரைனுக்கு உதவுமாறும் அவர் மற்ற நாடுகளுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான EXIT POLL முடிவுகள் கணித்துள்ளன. ஆனால், அண்மையில் நடந்த அரியானா தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரிய மெஜாரிட்டியுடன் (படம் பார்க்க) ஆட்சியை பிடிக்கும் என EXIT POLL சொன்னது. ஆனால், பாஜக தான் ஆட்சியை பிடித்தது. இந்த முறையும் EXIT POLL முடிவுகள் தவறாகுமா?
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு சுருண்டது. ஜெய்ஸ்வால்(0), படிக்கல் (0), கோலி (5), ராகுல் (26), ஜுரேல் (11), வாஷிங்டன் சுந்தர் (4), பண்ட் (37), ராணா (7), பும்ரா (8), நிதிஷ் குமார் ரெட்டி (41) எடுத்து வெளியேறினர். சிராஜ் (0) ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸி. அணியில் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்த சீமான், திடீரென அவரை நேரில் சந்தித்தது <<14676435>>அரசியல் நகர்வு<<>> என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய்யின் அரசியல் வருகையை பின்னடைவாக கருதும் அவர், விஜய் எதிர்ப்பு மன நிலையில் உள்ள ரஜினி ரசிகர்களை, தனது பக்கம் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அக்கட்சியின் சாட்டை துரைமுருகன் X பக்கத்தில், புலி+கழுகு எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியை சந்தித்ததே அரசியல் தான், அரசியல் இல்லாமல் எதுவும் எல்லை என சீமான் கூறியுள்ளார். ரஜினியை நீண்ட நாள்களாக சந்திக்க வேண்டும் என்று இருந்ததாகவும், அவருடன் திரைத்துறை, அரசியல் என பல விஷயங்களை ஆலோசித்ததாகவும் கூறினார். மேலும், சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினியின் கூற்றை ஆதரித்த அவர், அதைத்தான் அமைப்பு தவறாக இருப்பதாக தான் கூறுவதாகவும் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். சீமானின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதால் விலகுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விழுப்புரம், சேலம் மாவட்டச் செயலாளர்கள் விலகிய நிலையில் தற்போது கோவை மாவட்டச் செயலாளர் விலகியுள்ளது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர் மல்லிப்பட்டினத்தில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரம் காரணமாக ஆசிரியை ரமணியை மதன் குமார் பள்ளி வளாகத்திலேயே கொலை செய்தார். இந்த விவகாரம் மாணவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக மனநல ஆலோசனை வழங்கப்படவுள்ளது. மேலும், பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
IIT, NIT உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் UG படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. JEE Mains மற்றும் JEE Advanced என இரு கட்டங்களாக நடத்தப்படும் இதனை தேசிய தேர்வு முகமை(NTA) நடத்துகிறது. 2025 – 2026 கல்வி ஆண்டிற்கான இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். அப்ளை செய்ய விரும்புவோர் இரவு 9 மணி வரை <
Sorry, no posts matched your criteria.