India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மனைவி கோமாவில் இருப்பதை வைத்து தன்னை விமர்சித்தோருக்கு நடிகர் சத்யராஜ் பதிலடி கொடுத்துள்ளார். சத்யராஜ் சாமி கும்பிடாததாலும், சாமியை திட்டுவதாலுமே அவரின் மனைவி உடல்நிலை பாதித்து கோமா நிலைக்கு சென்றதாக சிலர் சோசியல் மீடியாவில் விமர்சித்தனர். இதற்கு சத்யராஜ், சாமி கும்பிடறதுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? சாமி கும்பிடறவங்க வீட்டில் எதுவும் நடப்பதில்லையா? என ஆத்திரத்துடன் கொந்தளித்துள்ளார்.
மக்களுக்கு போலீஸ் மீது நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையிலான செயலை டெல்லியைச் சேர்ந்த 2 பெண் காவலர்கள் செய்துள்ளனர். சீமா தேவி, சுமன் ஹூடா என்ற இவர்கள் கடந்த 9 மாதங்களில் காணாமல் போன 4- 17 வயதுடைய 104 குழந்தைகளை மீட்டுள்ளனர். ஹரியானா, பிஹார், உ.பி. மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு தெரியாத ஊர், மொழி பிரச்னை என பல்வேறு சவால்களை சந்தித்த போதிலும், இவர்கள் இந்த பணியை செய்து முடித்துள்ளனர்.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுக்மா பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, அவர்கள் சடலங்கள் அருகில் கிடந்த ஏராளமான ஆயுதங்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டன.
இந்தியாவில் விமான டிக்கெட் நிலவரம் உள்ளிட்ட வர்த்தக சேவை செய்திகள் மூலம் தனியார் நிறுவனங்கள் ரூ.2,500 கோடி ஈட்டுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் WHATSAPPக்கு மட்டும் 39% கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இனி இந்த சேவை இலவசம் என WHATSAPP அறிவித்துள்ளது. இதுவரை செலுத்திய 29 காசு செலுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளது. தனது சந்தையை மேலும் விரிவாக்கம் செய்ய WHATSAPP இம்முடிவை எடுத்துள்ளது.
வீட்டுமனை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று கூறி, விசாரணைக்கு தடை விதிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1) ரசவாதம் என்பது இரும்பை பொன்னாக்கும் கலை 2) MISA – Maintenance of Internal Security Act 3) பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்டவர் – ரூஸோ 4) நிலவின் ஒளி பிரதிபலிப்பு பூமியை வந்தடைய 1.28 வினாடிகள் ஆகும் 5) ‘கம்பன் யார்?’ நூலின் ஆசிரியர் முனைவர் மா. ராசமாணிக்கம் 6) கடல் பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிய உதவும் கருவி – Chronometer 7) இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் 1959இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை (TN PWD)ல் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 760 பணியிடங்களில் இணைபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்களுக்கு ₹9,000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ₹8,000 வழங்கப்படுகிறது. 18 – 24 வயதிற்கு உட்பட்ட தகுதியுடையவர்கள் இந்த லிங்கில் http://www.mhrdnats.gov.in/ விண்ணப்பிக்கலாம். டிச. 31ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
சனாதனம் தொடர்பாக பேசியதற்காக நாடு முழுவதும் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கக் கோரிய உதயநிதி ஸ்டாலினின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் 2025 பிப்.17ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக உதயநிதிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொடுக்கப்பட்ட விலக்கு தொடர்வதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது, திருப்பத்தூர் தொகுதியில் திமுக – அதிமுகவினரிடையே நடந்த மோதலில் பெரியகருப்பன் உட்பட 8 பேர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டது. இந்த சம்பவம் நடந்த இடத்தில் பெரியகருப்பன் இல்லை என்றும், அவருக்கு தொடர்பு இல்லை எனவும் வாதிடப்பட்ட நிலையில், வழக்கு ரத்து செய்யப்பட்டது.
நட்பு வட்டத்தில் கல்யாணம் செய்த பலர் நிம்மதியாக இல்லை என்பதால் தான் கல்யாணம் செய்துகொள்ளப் போவதில்லை என நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கூறியுள்ளார். கட்டா குஸ்தி, PS உள்ளிட்ட படங்களில் ரசிகர்கள் மனங்களை வென்றவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி, ‘ஹலோ மம்மி’ பட நிகழ்ச்சியில் பேசிய அவர், அம்மா ஆசைக்காக மேட்ரிமோனியில் அக்கவுண்ட் உள்ளது. ஆனால் எனக்கு கல்யாணம் செய்துகொள்ள விருப்பமே இல்லை எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.