News November 22, 2024
அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான வழக்கு ரத்து

அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது, திருப்பத்தூர் தொகுதியில் திமுக – அதிமுகவினரிடையே நடந்த மோதலில் பெரியகருப்பன் உட்பட 8 பேர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டது. இந்த சம்பவம் நடந்த இடத்தில் பெரியகருப்பன் இல்லை என்றும், அவருக்கு தொடர்பு இல்லை எனவும் வாதிடப்பட்ட நிலையில், வழக்கு ரத்து செய்யப்பட்டது.
Similar News
News November 15, 2025
பிஹார் போல தமிழக பெண்கள் செயல்படுவர்: வானதி

பிஹாரில் பெண்கள் அதிகளவு பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதேபோன்ற வெற்றியை தமிழகத்திலும் உறுதியாக எதிர்பார்க்கிறோம். பெண்கள் தெளிவாக முடிவெடுத்துவிட்டால், அவர்களுக்கான அரசை உருவாக்கி காட்டுவார்கள் என்பதற்கு பிஹார் ஒரு உதாரணம். தமிழகத்தில் உள்ள பெண்களும், பாதுகாப்பான தமிழகம் அமைவதற்காக NDA கூட்டணியை தேர்வு செய்வர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
அனைத்து தோஷத்தையும் நீக்கும் விநாயகர் வழிபாடு!

ஞாயிற்றுக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில், விநாயகர் படத்தின் முன், ஒரு தட்டில் முழுவதுமாக அருகம்புல்லை பரப்பி வைக்கவும். அதன் மேல், அகல் விளக்கில், தேங்காய் எண்ணெய் ஊற்றி கிழக்கு திசை பார்த்தவாறு, தீபம் ஏற்றி வைக்க வேண்டும். ‘ஓம் கணேசாய நமஹ’ என்ற மந்திரத்தை 54 முறை உச்சரிக்கவும். விளக்கு குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். பிறகு, அருகம்புல்லை விநாயகரின் படத்துக்கு போட்டு விடலாம். SHARE IT.
News November 15, 2025
உலகில் டாப் 10 சிறந்த காலை உணவு

மனிதர்களுக்கு காலை உணவு என்பது இன்றியமையாதது. ஒருநாளைக்கு உடலுக்கு தேவைப்படும் ஆற்றலின் மூலமாக காலை உணவு உள்ளது. அந்தவகையில், உலகின் சிறந்த காலை உணவு 2025 பட்டியலை TasteAtlas வெளியிட்டுள்ளது. இதில் எந்தெந்த நாடுகள் டாப் 10 இடத்தை பிடித்துள்ள என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.


