News November 22, 2024

பும்ராவை செல்லமாக புகழ்ந்த மனைவி

image

பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் வைத்த இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகி வருகிறது. ஆஸி.,-க்கு எதிரான இன்றைய போட்டியில், 4 விக்கெட்களை பும்ரா கைப்பற்றினார். IND அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சொதப்பிய நிலையில், AUS அணியின் பேட்டிங் ஆர்டரை, கேப்டன் பும்ரா தனது ஸ்விங்கால் நிலைகுலைய செய்தார். இதை செல்லமாக புகழ்ந்த பும்ராவின் மனைவி, ‘சிறந்த பவுலர்.. அதைவிட சிறப்பான பின்னழகு’ என இன்ஸ்டா ஸ்டோரி வைத்துள்ளார்.

News November 22, 2024

கடுமையாக பேச வேண்டும்… ஸ்டாலின் உத்தரவு

image

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக எம்பிக்கள் மென்மையாக பேசக் கூடாது, கடுமையான குரலில் பேச வேண்டும் என்று அக்கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அறிவாலயத்தில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், “தமிழகத்திற்கு நிதி உரிமைகளை பெறும் வகையிலும், மத்திய அரசின் புதிய திட்டங்களை கொண்டு வரும் வகையிலும் பேச வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

News November 22, 2024

வேகமாக சாப்பிடும் வழக்கம் கொண்டவரா? இதை படிங்க

image

வேகமாக சாப்பிடுவது உடல் நலனை பாதிக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். சாப்பிடுவது மட்டுமல்ல, சாப்பிடும் முறையும் மிக முக்கியம் என கூறும் டாக்டர்கள், மெதுவாக சாப்பிடுவோருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் குறைவாகவே இருக்கும். ஆனால் வேகமாக சாப்பிட்டால் வாயு பிரச்னை, உடல்பருமன் பிரச்னையை ஏற்படுத்தும் எனவும் கூறுகின்றனர். ஆதலால் உணவு சாப்பிடுகையில் ரிலாக்ஸாக சாப்பிடுங்க. SHARE IT.

News November 22, 2024

பெர்த்தில் வரலாறு படைத்த IND-AUS அணிகள்!

image

பெர்த்தில் இன்று நடைபெற்ற IND-AUS முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணி பவுலர்களும் சாதனை ஒன்றை படைத்துள்ளனர். மொத்தமாக 17 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், AUS மண்ணில் 1952க்கு பிறகு முதல் நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச விக்கெட் என்ற சாதனையை இரு அணிகளும் படைத்துள்ளன. மேலும் 1902 ஆண்டு ஆஸி.யில் ENG – AUS மோதிய போட்டியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 25 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டதே இதுவரை சாதனையாக உள்ளது.

News November 22, 2024

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை காெட்டும்

image

இன்றிரவு (நவ.11) 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. ஏற்கெனவே ராமநாதபுரம், நெல்லை, தென்காசியில் தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News November 22, 2024

மத்திய அரசு நிறுவனத்தில் 640 காலி இடங்கள்.. உடனே APPLY

image

மத்திய அரசின் காேல் இந்தியா நிறுவனத்தில் 640 காலியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மைனிங் பிரிவில் 263 இடங்கள், எலெக்ட்ரீக் பிரிவில் 104 இடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு பிஇ, பிடெக் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலைக்கு www.coalindia.com இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இம்மாதம் 28ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தகவலை பகிருங்க.

News November 22, 2024

அதிக பெண் கவுன்சிலர் மாநிலங்கள்: தமிழ்நாடு கெத்து

image

பெண் கவுன்சிலர்கள் அதிகமுள்ள முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பிடித்து கெத்து காட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மாெத்தமுள்ள கவுன்சிலர்களில் 46% பேர் பெண்கள். இவர்களை கணக்கிட்டு அதிக பெண் கவுன்சிலர்கள் காெண்ட முதல் 10 மாநிலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இமாச்சல் முதலிடத்திலும், TN 10ஆவது இடத்திலும் உள்ளன. TN-ல் 51% பெண் கவுன்சிலர்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

News November 22, 2024

GOOGLE குரோம் பயனாளரா நீங்க? உஷாரா இருங்க..

image

GOOGLE குரோம் பயனாளர்களுக்கு மத்திய கணினி எமர்ஜென்சி குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், கணினிகளில் Windows மற்றும் Mac க்கான 131.0.6778.69/70க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷனிலும், Linuxக்கு 131.0.6778.69க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷனிலும் கூகுள் குரோம் இயங்குவதாகவும், இதனால் தகவல்களை திருடும் அபாயம் இருப்பதால், உடனே அப்டேட் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தகவலை பகிருங்க.

News November 22, 2024

1 கோடி வாடிக்கையாளர்களை இழந்த Jio, Airtel..!

image

Jio உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை காட்டிலும் BSNL கடந்த செப்., மாதத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருப்பது, TRAI அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த செப்., மாதத்தில் 8.49 லட்சம் புதிய கஸ்டமர்களை பெற்று, BSNL-ன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 9.18 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் அதே மாதத்தில் Jio- 79.69 லட்சம், Airtel- 14.34, Vodafone Idea- 15.53 லட்சம் கஸ்டமர்களை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

News November 22, 2024

இந்திய அரசியலமைப்பில் Secularism இருக்குமா?

image

இந்திய அரசியலமைப்பு முகவுரையில் உள்ள “சோசலிசம், மதச்சார்பின்மை” வார்த்தைகளை நீக்க கோரும் வழக்கில், வரும் 25ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கிறது. சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தொடர்ந்த இவ்வழக்கை, பெரிய அமர்வுக்கு மாற்றவும் SC மறுத்துவிட்டது. 1976 எமர்ஜென்சியின்போது 42வது சட்டத்திருத்தம் மூலம் இந்திரா காந்தி அரசால் முறையாக பார்லிமெண்ட் இன்றி, இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டது என்பதுதான் புகார்.

error: Content is protected !!