India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2ம் இன்னிங்ஸில் இந்திய அணி, 487/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது. இதன் மூலம், இந்திய அணி ஆஸி.க்கு 533 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்துள்ளது.அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161, கோலி 100* ரன்கள் எடுத்தனர்.
திமுக வெற்றி பெறவும் கூட்டணி அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, அதிமுக பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் அவற்றால் வெற்றி பெற முடியாது எனக் கூறினார். மேலும், எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்காமல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை எனவும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒருமுறை ரூ.6,000, மாதந்தோறும் ரூ.5,000 வழங்கும் PM INTERNSHIP திட்டம் வரும் 2ஆம் தேதி தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டாேபர் 3இல் PM மாேடியால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு ஆன்லைனில் 6.2 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து திட்டத்தை மோடி தொடங்கி வைத்து முதல்கட்ட நியமன கடிதங்களை வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பொங்கலன்று சி.ஏ. தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “தமிழர் விரோத பாஜக” என திமுக நிர்வாகி ராஜீவ்காந்தி சாடியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பாஜக நிர்வாகி, பொங்கல் தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் கொண்டாடப்படுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன், “சரியாக சொன்னீர்கள், தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது” எனக் கூறியுள்ளார்.
ஆந்திராவில் திருப்பதி மாவட்டம் ஏர்பேடு பகுதியில் அரசு பேருந்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 3 பயணிகள் மட்டுமே இருந்த பேருந்தில் ஏறி பின் சீட்டில் அமர்ந்தவர், சிறிது நேரத்தில் தான் கொண்டு வந்த கயிற்றால் ஓடும் பேருந்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட நடத்துநர் போலீசில் புகார் அளித்தார். இறந்தவர் விவரம் மற்றும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
இபிஎஸ்சை கரப்பான்பூச்சி என்று துணை CM உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுக EX நிதியமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலினுக்கு கரப்பான்பூச்சியை கண்டு பயம் என்றும், அதனால் தூங்கும்போதும், எதை பார்த்தாலும் கரப்பான்பூச்சியாகவே தெரியும் என்றும் பதிலடி கொடுத்தார். யார் கரப்பான்பூச்சி, யார் தமிழ்நாட்டை வழிநடத்தும் சக்தி என்பது 2026ஆம் ஆண்டு தேர்தலில் தெரிந்து விடும் என்றார்.
வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (25.11.24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழையும் கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, முதல் டெஸ்டின் 2ம் இன்னிங்ஸில் 94 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள், 1 சிக்ஸ் அடித்து அரைசதம் விளாசியுள்ளார். 381/5 ரன்களை குவித்து இதுவரை இந்திய அணி 427 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இது அவரின் 32-வது அரைசதமாகும்.
கேப்டன் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியுடன் இன்று சேர்ந்து கொண்டார். தனக்கு இரண்டாவது குழந்தையை பிறந்திருப்பதையொட்டி மும்பையில் இருந்த அவர், முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட்டார். தற்போது அணியுடன் சேர்ந்திருக்கும் அவர், இரண்டாவது போட்டியில் இருந்து தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜானகி 1989ஆம் ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பின் ஜெயலலிதாவிடம் அதிமுகவை ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்து விலகினார். அந்த தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஜானகி நூற்றாண்டு விழாவை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதேபோல, OPSஉம், சசிகலாவும் அதிமுகவை விட்டு விலக வேண்டும் என்று EPS அணியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். யார் தியாகம் செய்யப் போகிறார்கள்?
Sorry, no posts matched your criteria.