News November 25, 2024

எனக்கு பேனர் வேண்டாம்: உதயநிதி

image

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் வரும் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக திமுகவினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், தனது பிறந்தநாளுக்கு பேனர் வைக்கவோ, பட்டாசு வெடிக்கவோ வேண்டாம் என உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அன்றைக்கு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள உதயநிதி, இதுவே தனது பிறந்தநாள் வேண்டுகோள் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 25, 2024

BGT: இந்திய அணி அபார வெற்றி

image

BGT டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணி, அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் நாள் பவுலர்களுக்கு சாதகமான பிட்ச் காரணமாக இந்தியா 150 ரன்களும் ஆஸ்திரேலியா 104 ரன்களும் மட்டுமே எடுத்தனர். ஆனால், இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்தியா 487 அடித்து தூள் கிளப்ப, அதனை சேஸ் செய்ய முடியாமல் ஆஸ்திரேலிய அணி 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி கண்டிருக்கிறது.

News November 25, 2024

அதானிக்கு எதிராக திரும்பும் வங்கதேசம்

image

கென்யா, அமெரிக்காவைத் தொடர்ந்து வங்கதேச அரசு அதானிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஷேக் ஹசீனா தலைமையிலான முந்தைய அரசு அதானி நிறுவனத்துடன் மின்சக்தி துறை சார்ந்த ஒப்பந்தங்கள் செய்திருந்தது. அவை சட்ட விதிகளுக்கு மாறாக இருப்பதாக யூனுஸ் தலைமையிலான அரசு அமைத்த விசாரணைக்கு குழு தெரிவித்துள்ளது. அத்துடன், கூடுதல் விசாரணைக்கு சர்வதேச புலனாய்வு அதிகாரிகளை நியமிக்கவும் பரிந்துரைத்துள்ளது.

News November 25, 2024

தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்

image

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளையும் (26.11.24) நாளை மறுநாளும் (27.11.24) தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. அப்படியானால், 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். வியாழக்கிழமைக்கு (28.11.24) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News November 25, 2024

சரத் பவாருக்கு வந்த புதிய சிக்கல்!

image

மகாராஷ்டிரா தேர்தலில் தோல்வியடைந்ததால் ராஜ்ய சபாவுக்கு சரத் பவார் மீண்டும் தேர்வாக முடியாத நிலை உருவாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிட்ட NCP(SP) 10 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 2026 ஏப்ரலில் சரத் பவாரின் ராஜ்ய சபா எம்.பி பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. அவரது கட்சிக்கு போதிய எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால் மீண்டும் ராஜ்ய சபா எம்.பியாக தேர்வாக முடியாத நிலை உருவாகியுள்ளது.

News November 25, 2024

இரட்டை இலை சின்னம் – ஒரு வாரத்தில் முக்கிய உத்தரவு

image

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகள் முடியும் வரை அதிமுகவுக்கு அதனை ஒதுக்கக்கூடாது என சூர்யமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்னும் ஒரு வாரத்தில் இரட்டை இலை தொடர்பான மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்தது.

News November 25, 2024

AI தொழில்நுட்பத்தால் அதிகரித்த தங்கத்தின் தேவை!

image

AI தொழில்நுட்பத்தின் வருகையால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் (WGC) தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், தரவு மையம், சுகாதாரம், நிதி & புத்தாக்கத் துறைகளில் AI பயன்பாடு அதிகரித்துள்ளது. AI தொழில்நுட்பத்தில் தங்கத்தின் தேவை இன்றியமையாததாகி உள்ளது. இதன் காரணமாக 2023இல் மின் கடத்தல், நீண்ட கால செயல்திறன் கொண்ட தங்கத்தின் தேவை 249 டன் என்ற நிலையை எட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.

News November 25, 2024

நாடாளுமன்ற அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

image

அதானி விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற அவைகளை முடக்கி வருகின்றனர். காலை 11 மணிக்கு கூடிய மக்களவை அமளி காரணமாக 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

News November 25, 2024

மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட பலி..!

image

கோவை மாவட்டம் நரசிபுரத்தைச் சேர்ந்த பாரதி கண்ணன் (24) கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் ஆன்லைன் சூதாட்டத்தில் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இந்த விரக்தியில் இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக, நேற்று தூத்துக்குடியில் ஒரு இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

News November 25, 2024

மணிப்பூர்: குழந்தை என்றும் பாராமல் சித்ரவதை!

image

மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ள சூழலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அண்மையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அதில் 3 வயது ஆண் குழந்தையும் ஒன்று. தற்போது அதன் பிரேதபரிசோதனை ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. குழந்தை என்றும் பாராமல் அது இரும்பு ராடால் தாக்கப்பட்டுள்ளது. இதில் அதன் வலது கை உடைந்துள்ளது. பின்னர் அக்குழந்தையின் நெஞ்சு கத்தியால் கீறப்பட்டுள்ளது. அதன் வலது கண்ணை காணவில்லை.

error: Content is protected !!