News November 25, 2024
சரத் பவாருக்கு வந்த புதிய சிக்கல்!

மகாராஷ்டிரா தேர்தலில் தோல்வியடைந்ததால் ராஜ்ய சபாவுக்கு சரத் பவார் மீண்டும் தேர்வாக முடியாத நிலை உருவாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிட்ட NCP(SP) 10 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 2026 ஏப்ரலில் சரத் பவாரின் ராஜ்ய சபா எம்.பி பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. அவரது கட்சிக்கு போதிய எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால் மீண்டும் ராஜ்ய சபா எம்.பியாக தேர்வாக முடியாத நிலை உருவாகியுள்ளது.
Similar News
News April 11, 2026
திருப்பூர்: 10th போதும்., ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

திருப்பூர் மக்களே மத்திய அரசின் நிலக்கரி நிறுவனமான NCL-ல் பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 577 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 18 – 30 வயதுகுட்பட்ட 10th, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் மே 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.43,775 – ரூ.47,330 வரை வழங்கப்படும். மேலும் பணி விவரம் மற்றும் விண்ணப்பிக்க <
News April 11, 2026
கிட்னி திருட்டை நிரூபித்தால் ₹1 கோடி பரிசு

திமுக MLA கதிரவன் ஹாஸ்பிடலில் கிட்னி திருடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினார். இந்நிலையில், மண்ணச்சநல்லூரில் மீண்டும் போட்டியிடும் கதிரவன் இதை மறுத்துள்ளார். தனது ஹாஸ்பிடலில் அறுவை சிகிச்சைகள் அரசு அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக நடைபெறுகிறது எனக் கூறிய அவர், கிட்னி திருட்டு குற்றச்சாட்டை நிரூபித்தால், ஒரு கோடி பரிசு அளிப்பதாகவும், அரசியலை விட்டு விலக தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.
News April 11, 2026
170 வேட்பாளர்களை அறிவித்தார் வேல்முருகன்

தவாக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் பட்டியலை வேல்முருகன் வெளியிட்டுள்ளார். 2 கட்டங்களாக வெளியிட்டுள்ள இப்பட்டியலில் 170 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டார் தொகுதிகளான கொளத்தூரில் ஊர்மிளா, எடப்பாடியில் கோவிந்தராஜ், திருச்சி கிழக்கில் ராயல் ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இக்கூட்டணிக்கு கேமரா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


