News December 5, 2024

சிவராஜ்குமாருக்கு புற்றுநோய்? USAவில் சிகிச்சை

image

ஜெயிலர் படத்தின் மூலம் தமிழக ரசிகர்களை கவர்ந்த கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு உடல் நல பாதிப்பு காரணமாக, அமெரிக்காவில் அறுவைசிகிச்சை நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. அவருக்கு புற்றுநோய் என செய்திகள் வெளிவந்தாலும், இது தொடர்பாக சிவராஜ்குமார் கூறுகையில், தனக்கு என்ன பிரச்னை என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என குறிப்பிட்டு, ரசிகர்கள் யாரும் பயப்படவேண்டாம் எனத் தெரிவித்தார்.

News December 5, 2024

IND-AUS 2வது டெஸ்ட்: வழிவிடுவாரா வருண பகவான்?

image

இந்தியா-ஆஸி. அணிகள் மோதும் 2வது பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் போட்டி பகல்-இரவு போட்டியாக அடிலெய்ட் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட வாய்ப்புள்ளது. ஆனால் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்பதால் ஆட்டத்தில் பெரும் பாதிப்பு இருக்காது.

News December 5, 2024

உங்களிடம் இந்த 7 பழக்கங்கள் இருக்கா?

image

வாழ்க்கையில் வெற்றிபெற சில பழக்கங்கள் அவசியம். அதை காணலாம். *எதிர்மறை சிந்தனையில் இருந்து வெளியே வாருங்கள் * பிறருடன் உங்களை ஒப்பிட வேண்டாம் * முக்கியமாக சோம்பேறித்தனத்தை கைவிடுங்கள் * யாரை பார்த்தும் பொறாமை கொள்ள வேண்டாம் * Over Confidence கைவிட வேண்டும் * தற்போதைய வேலையில் கவனம் இருக்கணும், எதிர்காலம் பற்றி கவலை தவிர்க்கவும்.

News December 5, 2024

ISROவில் இலவச சைபர் பாதுகாப்பு பயிற்சி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கல்லூரி மாணவர்களுக்கான 2 வார கால இலவச சைபர் செக்யூரிட்டி பயிற்சி வகுப்பு நடந்த உள்ளது. இந்த சான்றிதழ் பயிற்சி வகுப்பு, வரும் 9 – 20ம் தேதி வரை நடக்கிறது. கல்லூரி முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்களும், முதுநிலை மாணவர்களும் பங்கேற்கலாம். இணைய வழியில் தகவலை பாதுகாப்பது குறித்து செயல்முறையாக விளக்கப்பட உள்ளன. இதில் பங்கேற்க <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News December 5, 2024

முட்டை விலை உயர்வால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

image

தமிழகத்தில் முட்டை உற்பத்தியின் மையமாக கருதப்படும் நாமக்கல் மண்டலத்தில் அதன்விலை ரூ.5.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சில்லரை கடைகளில் 1 முட்டை விலை ரூ.6.40- ரூ.7 வரை வியாபாரிகள் உயர்த்தியுள்ளனர். எனவே இறைச்சிக்கு பதில் முட்டை சாப்பிடும் அசைவ பிரியர்கள், கூடுதலாக செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் 1 முட்டை விலை என்ன? கீழே கமெண்ட் பதிவிடுங்கள்.

News December 5, 2024

பிங்க் பால் டெஸ்டில் சாதிக்குமா இந்திய அணி!

image

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது BGT டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நாளை துவங்க உள்ளது. நாளை காலை 9.30 தொடங்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, ஹாட் ஸ்டாரில் ஓடிடியில் காணலாம். இதுவரை இந்தியா- ஆஸி ஒருமுறை பிங்க் பால் டெஸ்டில் மோதியுள்ளன. அதில் ஆஸி.யே வெற்றி பெற்றுள்ளது. கடந்தமுறை அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி தருமா?. கீழே கமெண்ட் பதிவிடுங்கள்.

News December 5, 2024

இன்னும் போன்பூத்கள் பயன்பாட்டில் இருக்கிறதா?

image

கடைசியாக எப்போது டெலிபோன் பூத்தை பார்த்தீங்க. கடந்த 3 வருடத்தில் 44,922 டெலிபோன் பூத்கள் மூடப்பட்டுவிட்டது. தற்போது 17,000 பூத்கள் பயன்பாட்டில் உள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர் கூறினார். தமிழகத்தில் நகரங்களில் 2,809 PCOக்களும், கிராமங்களில் 305 PCOக்களும் இருக்கிறதாம். நீங்க கடைசியா போன் பூத்’ல பேசுனா விஷயம் நியாபகம் இருக்கா?

News December 5, 2024

2 மாதம் ரேஷன் பொருள்கள் இலவசம்

image

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ₹2,000 நிவாரண தொகையை அரசு அறிவித்துள்ளது. இதனை உயர்த்தி வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் 2 மாதம் ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 5, 2024

இனி வீட்டு கடனை கூட்டுறவு வங்கிக்கு மாற்றிக் கொள்ளலாம்!

image

பொதுத்துறை & தனியார் வங்கிகளில் வாங்கிய வீட்டு கடனை, தமிழக அரசின் கூட்டுறவு வங்கிக்கு மாற்றிக் கொள்ளும் வசதி தொடங்கப்பட்டு உள்ளது. இது தவிர, ஏற்கெனவே வாங்கிய தொகையை விட, கூடுதலாக கடன் வாங்கும் ‘Top up’ வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில் EMI முறைக்கு பதில், அசல் தொகை செலுத்துவதற்கு ஏற்ப வட்டி குறையும். ₹75 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

News December 5, 2024

காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழை

image

இன்று (டிச.5) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் விவரங்களை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர், விருதுநகர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

error: Content is protected !!