News December 5, 2024

ISROவில் இலவச சைபர் பாதுகாப்பு பயிற்சி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கல்லூரி மாணவர்களுக்கான 2 வார கால இலவச சைபர் செக்யூரிட்டி பயிற்சி வகுப்பு நடந்த உள்ளது. இந்த சான்றிதழ் பயிற்சி வகுப்பு, வரும் 9 – 20ம் தேதி வரை நடக்கிறது. கல்லூரி முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்களும், முதுநிலை மாணவர்களும் பங்கேற்கலாம். இணைய வழியில் தகவலை பாதுகாப்பது குறித்து செயல்முறையாக விளக்கப்பட உள்ளன. இதில் பங்கேற்க <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

Similar News

News July 5, 2025

தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

image

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News July 5, 2025

‘MSME நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்க’

image

50 கிலோ வாட் வரை கட்டண உயர்வில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் குறு நிறுவனங்கள் 120 கிலோ வாட் வரை பயன்படுத்துவதால் இந்த அறிவிப்பு உதவாது என தமிழ்நாடு தொழில் அமைப்புகள் தெரிவித்தன. கோவையில் பேட்டியளித்த இந்த அமைப்பினர், MSME நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், சூரிய மின்சக்தி பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் கட்டணத்தையும் நீக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

News July 5, 2025

இரவு 10 மணிக்கு மேல் கரண்ட் கட்… ஏன் தெரியுமா?

image

ரஷ்யாவில் நாளுக்கு நாள் மக்கள்தொகை குறைந்து வருவதால், அதை தடுக்க வித்தியாசமான யோசனைகள் முன்வைத்துள்ளது அதன் ‘பாலியல் அமைச்சகம்’. அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை வீடுகளுக்கான மின்சாரத்தையும், இன்டர்நெட் இணைப்பையும் கட் செய்ய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனால், தம்பதியினர் உறவில் ஈடுபட வாய்ப்பு அதிகரிக்கும், குழந்தை பிறப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்படி இருக்கு?

error: Content is protected !!