India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் 2025ஐ ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். 2024ல் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்களோடு புத்தாண்டை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்போம். வரும் காலங்கள் நம்முடையதே என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைப்போம். எதற்கும் அசராத பேராற்றலாக உருவாக வேண்டும் என்பதைக் குறிக்கோளாக கொண்டு, இந்நொடியை மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் தொடர்வோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரை யுக்திகளை வகுக்க ராபின் சர்மாவின் SHOWTIME CONSULTANCY நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கும், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சிக்கும், மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இந்நிறுவனம் தேர்தல் யுக்திகளை வகுத்து கொடுத்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் திமுகவுக்காக பணியாற்றியது.
அண்ணா பல்கலை., மாணவிக்கு நடந்த சம்பவம் போல், ராமநாதபுரத்திலும் அரங்கேறியுள்ளது. புத்தேந்தல் பகுதியில் காதலுடன் இளம்பெண் ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், காதலனை அடித்து விரட்டிவிட்டு, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அண்ணா பல்கலை. வன்கொடுமை விவகாரத்தை முன்வைத்து இன்று நாதக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில், ஒரு வயதான அம்மா, ஏதோ கோபத்தில் உங்க (ஸ்டாலின்) போஸ்டர் மீது செருப்பு வீசியதற்காக அவரை பிடிக்க போலீஸ் படையே புறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உங்க போஸ்டர் அவமதிக்கப்பட்டதே.. அப்போ ஏன் நீங்க கோபப்படல. அன்று உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவன் நான் மட்டும்தான் எனக் கூறினார்.
‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிய இப்படத்தை வரும் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் பார்க்கலாம் என எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனால் இந்த பொங்கலில் எந்த பெரிய நடிகர்களின் படமும் வெளியாகவில்லை.
➤மேஷம் – பக்தி
➤ ரிஷபம் – பெருமை
➤மிதுனம் – வரவு
➤கடகம் – இன்பம்
➤சிம்மம் – ஆர்வம்
➤கன்னி – நன்மை
➤துலாம் – ஆதாயம்
➤விருச்சிகம் – அன்பு
➤தனுசு – ஜெயம்
➤மகரம் – லாபம்
➤கும்பம் – சுகம் ➤மீனம் – மகிழ்ச்சி.
‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு இல்லை என்ற ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதற்கு அஜித் ரசிகர்கள், சம்பவம் பண்ண ரெடியா இருக்காரு தல. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நாளை ட்ரெய்லர் வருது, அதில் உங்களுக்கு எல்லா பதிலும் கிடைக்கும் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். அதற்கு அந்த ட்ரெய்லர் எந்த டைம் வருதுன்னு தான் தெரியவில்லை என நெட்டிசன்களும் பதிலுக்கு கமெண்ட் செய்கின்றனர்.
சீமான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமையை கண்டித்து., சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அனுமதியின்றி போராட்டம் நடத்த முயற்சித்ததால், சீமான் உட்பட நாதக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புத்தாண்டு நாளை பிறப்பதால் எல்லோர் வீட்டிலும் புத்தம் புது காலண்டர்கள் மாட்டப்பட்டிருக்கும். டெய்லி காலண்டர்கள் என்றால் தினசரியும், மாத காலண்டர்கள் என்றால் மாதந்தோறும் அதன் பேஜ்களை மாற்ற வேண்டும். இந்த கஷ்டம் கூட வேண்டாம் என்பதற்காக, ‘ஒன் பேஜ் காலண்டர்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரே பக்கத்திலேயே தேதி, கிழமை, வாரத்தை பார்த்துக் கொள்ளலாம். இந்த சூப்பர் காலண்டர் உங்களுக்குதான். SHARE IT.
இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதில், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதேபோல், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இந்தத் தகவலை பகிருங்க.
Sorry, no posts matched your criteria.