News January 1, 2025
ஸ்டாலினுக்காக குரல் கொடுத்தவன் நான்: சீமான்

அண்ணா பல்கலை. வன்கொடுமை விவகாரத்தை முன்வைத்து இன்று நாதக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில், ஒரு வயதான அம்மா, ஏதோ கோபத்தில் உங்க (ஸ்டாலின்) போஸ்டர் மீது செருப்பு வீசியதற்காக அவரை பிடிக்க போலீஸ் படையே புறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உங்க போஸ்டர் அவமதிக்கப்பட்டதே.. அப்போ ஏன் நீங்க கோபப்படல. அன்று உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவன் நான் மட்டும்தான் எனக் கூறினார்.
Similar News
News July 9, 2025
குஜராத் பாலம் விபத்து: PM மோடி இரங்கல்

குஜராத்தில் <<17003795>>பாலம் இடிந்து விழுந்த விபத்தில்<<>> உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்த கோர விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PMNRF நிதியிலிருந்து தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 9, 2025
முடி கொட்டுதா? இந்த பிரச்னையாகவும் இருக்கலாம்…

இன்றைய தலைமுறையினருக்கு பெரிய பிரச்னையே முடி உதிர்வுதான். என்ன பண்ணாலும் முடி கொட்டுவது நிற்பதில்லை என புலம்புபவர்கள் தான் அதிகம். அது மரபியல், ஹார்மோன் பிரச்னைகளையும் சார்ந்தது என்றாலும், சிலரின் Lifestyle-ம் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பழக்கங்கள் உங்களுக்கு இருந்தால், உடனே அவற்றை மாற்றிக் கொள்ளுங்கள்.
News July 9, 2025
புதுவை CM ராஜினாமா செய்வதாக கூறியதால் பரபரப்பு!

சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தியில் உள்ள புதுவை CM ரங்கசாமி தான் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் சுமூக உறவு இல்லை என பேசப்பட்டு வரும் நிலையில், CM பரிந்துரை செய்த அனந்தலட்சுமியை தவிர்த்து கவர்னர் கைலாஷ்நாதன், செவ்வேள் என்பவரை நியமித்துள்ளார். இதனால், தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் அரசு – கவர்னர் இடையே மோதல் தொடங்கியுள்ளது.