India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளியான ‘கங்குவா’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. படத்தில் இரைச்சல் அதிகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், Volume சற்று குறைக்கப்பட்டது. இந்நிலையில், ரசிகர்களின் விமர்சனத்தை கருத்தில் கொண்டு தற்போது 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. 2 மணி நேரம் 22 நிமிடங்கள் ஓடக்கூடிய புதிய வடிவம் விரைவில் திரையரங்கில் ஒளிபரப்பப்படும் என தெரிகிறது.
2026 தேர்தலில் ADMK- TVK கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ADMKவுக்கு 154, TVKவுக்கு 80 என தொகுதி பங்கீடு செய்ய உள்ளதாகவும் செய்திகள் பரவின. TVK தரப்பு இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், TVKவுடன் கூட்டணி வைப்பதாக எப்போது அறிவித்தோம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கூட்டணி வைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுர குமார திசநாயக அடுத்த மாதம் அரசுமுறை பயணமாக இந்தியா வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றது. அண்டை நாடான இலங்கையில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றம், இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் நிலையில் அதிபரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் TASMACல் டிஜிட்டல் முறையில் மதுவிற்பனை செய்யும் முறை அமலாகியுள்ளது. இதனால், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், பல இடங்களில் ரசீது வழங்கப்பட்டாலும் கூடுதலாகக் கடைக்காரர்கள் ₹10 கட்டாயமாக வசூலிக்கின்றனர். இதனால், மதுப்பிரியர்கள், ‘இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு’ என புலம்பியபடியே மதுவை வாங்கிச் செல்கின்றனர்.
இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு மசோதாவை வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘2047க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. காப்பீடு நிறுவனங்களின் தற்போதைய அந்நிய நேரடி முதலீடு(FDI) 74%-மாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோட் படத்தைத் தொடர்ந்து, தளபதி-69 என்ற புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தை தீரன் அதிகாரம்-1 பட புகழ் இயக்குநர் ஹெச். வினோத் இயக்குகிறார். பட நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்நிலையில், தளபதி- 69 படத்தில் சரத்குமாரின் மகளான முன்னணி நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யும், வரலட்சுமியும் இருக்கும் படமும் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
புதுப்புது வழிகளில் சிலர் பணமோசடி செய்து வருகின்றனர். அந்த வரிசையில், மின்சார பயனாளர்களின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு நூதன முறையில் சிலர் கைவரிசை காட்டுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து TNEB எச்சரிக்கை விடுத்துள்ளது. பில் கட்டாததால் இணைப்பு துண்டிப்பு, இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என SMS அனுப்பி பண மோசடி செய்வதாகவும், அந்த SMS வந்தால் 1930-ஐ தொடர்பு கொள்ளும்படி TNEB கேட்டுள்ளது.
ஈரான் நாட்டின் தலைமை மதகுரு மற்றும் தலைவரான (சுப்ரீம் லீடர்) அயதுல்லா கமேனி, தனக்கு அடுத்த தலைவரை ரகசியமாக தேர்ந்தெடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது 85 வயதாகும் அயதுல்லாவுக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ரகசியமாக கூடிய நிபுணர்கள் குழு, கமேனியின் 2-வது மகனான மோஜ்டாபா கமேனி என்பவரை அடுத்த தலைவராக தேர்வு செய்துள்ளது. இவரும் கடும்போக்கு தலைவர் எனக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவை தொகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் பரப்புரை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இரு மாநிலங்களிலும் நவ.20 காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ.23 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மகாராஷ்டிராவில் 9.63 கோடி பேர் வாக்களிக்க வசதியாக 52,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘விடாமுயற்சி’ படத்தைத் தொடர்ந்து, இப்படத்திலும் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் காமெடி நடிகர் யோகி பாபு இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அவர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.