News October 28, 2025

ஜனநாயகன்: ஒரே வார்த்தையில் முடித்த பிரியாமணி

image

விஜய்யின் கடைசி படமாக ரிலீஸாகவுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. H வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரைன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜனநாயகனில் விஜய் உடனான காட்சிகள் பற்றி பிரியாமணியிடம் கேட்டதற்கு, ‘படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்’ என பதிலளித்துள்ளார். ஜனநாயகன் மாபெரும் வெற்றியாக அமையுமா?

News October 28, 2025

தமிழகத்தில் 98% செயல்பாட்டில் அரசு பள்ளி கழிவறைகள்

image

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 98% கழிவறைகள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. ஹரியானா, சண்டிகர் மாநிலங்கள், புதுச்சேரி, கோவா, டையூ டாமன் ஆகிய யூனியன் பிரதேச பள்ளிகளில் 100% கழிவறைகள் செயல்பாட்டில் உள்ளன. குறைந்தபட்சமாக, அருணாசல பிரதேசத்தில் 74.4% கழிவறைகள் செயல்பாட்டில் இருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவில் 98% கழிவறைகள் செயல்பாட்டில் உள்ளன.

News October 28, 2025

பெர்னாட்ஷா பொன்மொழிகள்

image

*மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது, எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது.
*நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.
*அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர், அது வலிகளை தந்த பிறகுதான் பாடத்தை கற்பிக்கிறது.
*இன்பமும் துன்பமும் பணத்தைச் சார்ந்தவை அல்ல. மனதைச் சார்ந்தவை. *பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியை போக்காது.

News October 28, 2025

ICU-வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஸ்ரேயஸ் ஐயர்

image

ஆஸி.,க்கு எதிரான கடைசி ODI போட்டியின் போது, ஸ்ரேயஸ் ஐயருக்கு விலா எலும்பில் அடிபட்டது. அவருக்கு ICU-வில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதால், ரசிகர்கள் கலக்கமடைந்தனர். இந்நிலையில், அவர் ICU-வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாறியுள்ளதாக ஹாஸ்பிடல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அக்.30 வரை ஹாஸ்பிடலிலேயே ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனிடையே, அவரது பெற்றோர் சிட்னிக்கு புறப்பட்டுள்ளனர்.

News October 28, 2025

முஸ்தஃபாபாத் டூ கபீர் தாம்: பெயரை மாற்றும் யோகி

image

வட இந்தியாவில் ஊர்களின் பெயரை மாற்றும் பழக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உ.பி.,யின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள முஸ்தஃபாபாத் என்ற கிராமத்தின் பெயர் ‘கபீர் தாம்’ என்று மாற்றவுள்ளதாக, CM யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். கபீர் தாஸ் என்பவர், பக்தி இயக்க முன்னோடியாக திகழ்ந்தவர். சமீபத்தில் டெல்லியின் பெயரை ‘இந்திரபிரஸ்தம்’ என மாற்ற <<18051816>>VHP<<>> கோரியிருந்தது.

News October 28, 2025

கடவுள்கிட்ட பேசுனீங்களா? சந்நியாசிகளிடம் கேட்ட ரஜினி

image

நீங்கள் கடவுளை பார்த்துள்ளீர்கள், அவர் எப்படி இருப்பார்? கடவுளிடம் நீங்க பேசியிருக்கிறீர்களா என்று சந்நியாசிகளிடம் ரஜினிகாந்த் கேட்பார் என்று அவரது நண்பர் ஸ்ரீஹரி கூறியுள்ளார். எப்போதும் இமயமலை, ரிஷிகேஷ் சென்று ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுவதை ரஜினி வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்திலும் அவர் ரிஷிகேஷ் சென்றார். இந்த பயணத்தின் போது ரஜினி ரோட்டு கடையில் கூட சாப்பிடுவார் என்றும் ஹரி தெரிவித்தார்.

News October 28, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 502 ▶குறள்: குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு.▶பொருள்: நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

News October 28, 2025

Global Roundup: ஹமாஸ் மெம்பருக்கு இஸ்ரேல் அனுமதி

image

*உகாண்டாவில் இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய அந்நாட்டு அதிபர் முசேவேனி.
*ஆஸி., நியூசி., PM-களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு.
*வடகிழக்கு இந்திய பகுதிகள், பங்களாதேஷின் மேப்பில் இருந்ததற்கு அந்நாட்டு அரசு மறுப்பு.
*UK மன்னர் சார்லஸை திட்டியவரால் பரபரப்பு.
*இறந்த பணயக்கைதிகளை தேடும் பணிக்காக, ஹமாஸ் உறுப்பினருக்கு இஸ்ரேல் அனுமதி.

News October 28, 2025

RO-KO-வை விமர்சித்தவர்கள் கரப்பான்பூச்சிகள்: ஏபிடி

image

கடந்த சில மாதங்களாக ரோஹித்தும், கோலியும் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததாக ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஒருவர் சரியாக விளையாடாத போது, பொந்துகளில் இருந்து வெளிவரும் கரப்பான்பூச்சிகள் போல் விமர்சகர்கள் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டிற்காக தங்களது ஒட்டுமொத்த ஆற்றலையும் கொடுத்தவர்கள் மீது ஏன் இந்த வன்மம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News October 28, 2025

5 ஆண்டுக்கும் நானே CM: சித்தராமையா

image

கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைத்தபோது, CM பதவியை சித்தராமையா, DK சிவக்குமார் ஆகியோர் 2.5 ஆண்டுகள் பங்கிட ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பதவியை விட்டுத்தர விரும்பாத சித்தராமையா, அதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், காங்., மேலிட முடிவுகளுக்கு உட்பட்டு, 5 ஆண்டுகளுக்கும் தானே CM ஆக நீடிப்பேன் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

error: Content is protected !!