India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

★ க்வேனா மாஃபாகா: 4-0-66-0
★ ஜெரால்ட் கோட்ஸி: 4-0-57-1
★ ஹர்திக் பாண்டியா: 4-0-46-1
★ ஜஸ்பிரித் பும்ரா: 4-0-36-0
★ பியூஷ் சாவ்லா: 2-0-34-1
★ ஷம்ஸ் முலானி: 2-0-33-0
அதிகபட்சமாக மாஃபாகா 66 ரன்களை அள்ளிக் கொடுத்துள்ளார்

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 வழங்குவதால் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சகோதரர் ஸ்டாலின் வழங்கும் 1000 ரூபாய், தாய் வீட்டு சீர் என பெண்கள் கூறுவதாக நெகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களும் திராவிட மாடல் அரசின் ஏதாவது ஒரு திட்டத்தால் பயனடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு, பார்தி ஏர்டெல் நிறுவனம் ₹150 கோடி வழங்கியதில் முக்கியத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பார்தி ஏர்டெல் குழுமத்தின் முதல் நிலை பங்குதாரரான ஒன் வெப் நிறுவனத்திற்கு, செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கும் உரிமத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதற்கு முன்பாக பாஜகவுக்கு நன்கொடையாக ஏர்டெல் நிறுவனம் ₹100 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியது அம்பலமாகியுள்ளது.

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் SRH அணி 277/3 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற RCBயின் சாதனையை (263) SRH முறியடித்துள்ளது. இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 62, அபிஷேக் ஷர்மா 63, க்ளாஸான் 80, மார்க்ரம் 42 ரன்கள் குவித்தனர். இன்று 78 ரன்கள் குவித்த க்ளாஸான், நடப்பு ஐபிஎல் ரன்களுடன் (143) ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றியுள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை குறைக்கப்பட்டதற்கு தேர்தல் தான் காரணம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். விருதுநகர் பிரசாரத்தில் பேசிய அவர், தேர்தல் வந்துவிட்டால் மக்கள் மீது பாஜகவுக்கு கரிசனம் கூடிவிடும் என விமர்சித்தார். மேலும், விலைவாசியை உயர்த்தி மோடி அரசு, தற்போது அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல காட்டிக்கொள்வதாக அவர் குற்றம்சாட்டினார்.

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடம் இருந்து 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் ஆகும். கோட்டயத்தைச் சேர்ந்த அப்பெண்ணை கைது செய்திருக்கும் சுங்கத்துறை அதிகாரிகள், போலீசாரிடம் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். சட்ட விரோதமாக தங்கத்தை கடத்தும் நோக்கில் அந்தப் பெண், உள்ளாடைக்குள் பதுக்கி வைத்து எடுத்து வந்திருக்கிறார்.

பிரதமர் மோடியைப் பொறுத்தவரைக்கும் குஜராத் தான் இந்தியா என அதிமுக எம்பி சி.வி சண்முகம் கூறியுள்ளார். கடலூரில் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘NLC நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட 1000 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லை. NLC விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து போராடிய அன்புமணி இன்று அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார். பாமக – பாஜக கூட்டணியால் மக்களுக்கு நலன் ஏதும் இல்லை’ என பேசியுள்ளார்.

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 16 பந்துகளை எதிர்கொண்ட இவர் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். தற்போது வரை SRH 10 ஓவரில் 148/2 ரன்கள் எடுத்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் 300 ரன்களை தொட வாய்ப்புள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி சிக்ஸர் மழை பொழிந்து வருகிறது. தற்போது வரை 12 ஓவர்கள் முடிவில் SRH 173/3 ரன்கள் எடுத்துள்ளது. இதில் 14 பவுண்டரிகளும், 12 சிக்ஸர்களும் விளாசப்பட்டுள்ளது. முதல் 10 ஓவர்கள் முடிவில் SRH அணி 148/2 ரன்கள் எடுத்திருந்தது. ஐபிஎல் வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்தது. கோடை வெயில் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வருவதால் பகல் வேளையில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில், மதுரை, தருமபுரி, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர் (பரமத்தி), சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.