News December 4, 2025

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் BJP செய்யும் சூழ்ச்சி: காங்., MP

image

பாஜகவின் வேலையே மதங்களுக்கு இடையே சூழ்ச்சி செய்வதுதான் என MP சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக சூழ்ச்சிகளுக்கு TN இடமளிக்கக்கூடாது என்ற அவர், இங்கிருக்கும் கலாசாரம் வேறு என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடும் கலாசாரமாக தமிழ் கலாசாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

AVM சரவணன் காலமானார்.. முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி

image

நேற்று இரவு தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடிய AVM சரவணன், இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். இந்த செய்தியை கேட்டு துடித்துப்போன ரஜினி, முதல் ஆளாக அவரின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். AVM ஸ்டுடியோவின் 3-வது தளத்தில் அவருக்கு இன்று மாலை 3.30 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைபிரபலங்கள் இன்னும் சற்றுநேரத்தில் அஞ்சலி செலுத்தவிருப்பதாக கூறப்படுகிறது.

News December 4, 2025

அரைநூற்றாண்டு கால தமிழ் சினிமாவின் மையப்புள்ளி!

image

AV மெய்யப்ப செட்டியாரின் மகனான <<18464432>>AVM சரவணன்<<>> இந்திய திரையுலகில் முக்கிய இடத்தை பிடித்தவர். MGR முதல் சூர்யா வரை அரைநூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவின் மையப்புள்ளியாக இயங்கியுள்ளார். சம்சாரம் அது மின்சாரம், முரட்டுக்காளை, முந்தானை முடிச்சு, சிவாஜி, அயன் போன்ற மறக்க முடியாத படங்கள் அவர் தயாரித்தவை. திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய அவர், 1986-ம் ஆண்டில் சென்னையின் ஷெரிப்பாகவும் பணியாற்றியுள்ளார்.

News December 4, 2025

USA: பனிப்புயலின் பிடியில் 5 கோடி மக்கள்!

image

ஒருபக்கம் மழை, புயலால் பல நாடுகள் தவித்து வரும் நிலையில், USA-வின் வடகிழக்கு பகுதிகளில் கடும் பனிப்புயல் தாக்கியுள்ளது. இதனால் அங்கு வாழும் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாசசூசெட்ஸ், நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவு ஒரு மணி நேரத்திற்கு ஒரு அங்குலம் என்ற வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News December 4, 2025

அதிமுக ஒருங்கிணைப்பு கைகூடி வருகிறதா?

image

அதிமுகவிலிருந்து மேலும் பலரை தூக்க KAS மும்முரம் காட்டுகிறாராம். இந்நிலையில் இதனை அறிந்த MGR மாளிகை இனியும் ஆட்களை இழக்கவேண்டாம் என சமாதான பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறதாம். இதற்காக வேலுமணியும், முனுசாமியும் கே.சி.பழனிசாமி, OPS ஆதரவாளர்கள் என பலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. வெள்ளைக் கொடி பறந்தால் OPS கட்சி ஆரம்பிக்கமாட்டார் என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

News December 4, 2025

BREAKING: ஏவிஎம் சரவணன் காலமானார்

image

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரான AVM சரவணன் (86) காலமானார். ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து திரைப்படம் தயாரித்தவர். குறிப்பாக, AVM தயாரிப்பில் உருவான ‘சிவாஜி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்திருந்தது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற சரவணன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News December 4, 2025

இந்திய மண்ணில் சாதனை படைத்த ரோஹித்!

image

SA-வுக்கு எதிரான 2-வது ODI-ல் 14 ரன்களில் அவுட்டானாலும், ரோஹித் சர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில், இந்திய மண்ணில் 9 ஆயிரம் ரன்களை அடித்த வீரர்களின் லிஸ்ட்டில் அவர் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் (14,192 ரன்கள்) முதல் இடத்திலும், கோலி (12,475 ரன்கள்) 2-வது இடத்திலும் உள்ளனர். டிராவிட்டை (9,004 ரன்கள்) முந்தி ரோஹித் சர்மா (9,005 ரன்கள்) 3-வது இடத்தில் முன்னேறியுள்ளார்.

News December 4, 2025

மக்களை திருத்தவே முடியாது: தமிழருவி மணியன்

image

இனி காமராஜர் மக்கள் கட்சியை நடத்துவதில் பயனில்லை என தமிழருவி மணியன் பேசியுள்ளார். எந்த கைமாறும் இல்லாமல் 16 ஆண்டுகள் கட்சி நடத்தியதாக கூறிய அவர், மக்களிடம் மாற்றம் வராததால் கட்சியை கலைத்து, தன்னுடன் இருந்தவர்களை தமாகாவில் சேர்த்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், பணம் எதுவும் வாங்காமல் ஓட்டு போடும் நிலையில் இப்போது மக்கள் இல்லை எனவும் இது திருத்தவே முடியாத சமூகம் என்றும் அவர் கொந்தளித்துள்ளார்.

News December 4, 2025

BREAKING: 12 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு.. வந்தது Alert

image

அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், கோவை, ஈரோடு, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். எனவே, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்.

News December 4, 2025

அதான் பாலைய்யா❤️!

image

பாலைய்யா என்றாலே பந்தா பண்ணக்கூடியவர் என்றுதானே அறிவோம், இதை கேளுங்க. சென்னையில் ‘அகண்டா 2’ பட பிரஸ்மீட்டுக்கு பத்திரிக்கையாளர்கள் சொன்ன நேரத்தில் வந்த நிலையில், பாலைய்யாவின் விமானம் 4 மணி நேரம் லேட். பத்திரிக்கையாளர்கள் காத்திருக்கும் விஷயமறிந்த அவர், சாப்பாடு தயாராக இருந்தாலும், சாப்பிடாமலே நேராக பத்திரிக்கையாளர்களை சந்திக்க வந்துள்ளார். பிறருக்கு மரியாதை கொடுக்கும் குணம்.. அதான் பாலைய்யா!

error: Content is protected !!