News March 19, 2024
சீமான் வழக்கில் விஜயலட்சுமிக்கு உத்தரவு

சீமான் வழக்கில் ஏப்.2ல் நேரிலோ, காணொலியிலோ ஆஜராக விஜயலட்சுமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. விஜயலட்சுமி ஆஜராக நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை என காவல்துறை தெரிவித்ததால், ஆஜராக அவகாசம் அளித்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News July 7, 2025
மீண்டும் சிக்குகிறார் செந்தில் பாலாஜி

2021-23-ல் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ₹397 கோடி முறைகேடு நடந்ததாக, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்தது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்வது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்வதாக தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்தது. அப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டால், மீண்டும் ED உள்ளே வரலாம் எனவும் அது கைது வரை கூட நீள வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
News July 7, 2025
அம்மன் சென்டிமென்ட்.. ஆட்டத்தை தொடங்கும் இபிஎஸ்!

2026 தேர்தல் பரப்புரையை இபிஎஸ் இன்று தொடங்குகிறார். கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள பிரசித்திபெற்ற வனபத்திரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளார். பின்னர் மாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ரோடு ஷோ நடத்தும் இபிஎஸ் இன்று மட்டும் 62 கி.மீ பயணம் செய்ய உள்ளார்.
News July 7, 2025
ஜூலை 7: வரலாற்றில் இன்று..

★1456: தூக்கிலிடப்பட்ட 25 ஆண்டுகள் கழித்து ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டது ★1575: இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையே ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது ★1799: ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூர் அடுத்துள்ள பகுதிகளைப் கைப்பற்றினர் ★1865: ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பான 4 பேர் தூக்கிலிடப்பட்டனர் ★1981: இந்திய கிரிக்கெட் அணி Ex. கேப்டன் தோனியின் பிறந்தநாள் இன்று.