News October 17, 2024

ஒரு நாள் வாடகை ரூ.8000: No Problem bro

image

கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை, ஸ்டார் ஹோட்டல்களுக்கு ஜாக்பாட் ஆக மாறிவிட்டது. ஆம், ரூ.8000 வரை வாடகை இருந்தும், கடந்த 2 நாள்களில் சென்னை ஸ்டார் ஹோட்டல்களில் ஐடி துறை இளைஞர்கள் ஏராளமானோர் அறைகளை புக் செய்துள்ளனர். வெள்ளத்தில் இருந்து தப்பிக்க மட்டுமல்ல, 2023-ல் நடந்தது போல் கார்களை இழந்துவிடக் கூடாது என்ற அச்சமும், தடையற்ற வை-ஃபை கிடைத்தால் ரூமிலிருந்தே வேலை செய்யலாம் என்பதும் காரணம் என்கின்றனர்.

Similar News

News August 18, 2025

ECI தலைமை ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்?

image

ECI-ன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர INDIA கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3ல் இரு பங்கு ஆதரவு பெற்று இந்த பதவி நீக்க தீர்மானம் வெற்றிபெற்றால், அந்த அதிகாரியை விசாரணை செய்ய குழு அமைக்கப்படும். பின்னர் குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

News August 18, 2025

பச்சைப்பொய் கூறும் CM ஸ்டாலின்: EPS விளாசல்

image

525 வாக்குறுதிகளில் ஸ்டாலின் அரசு 10% கூட நிறைவேற்றாமல் 98% நிறைவேற்றிவிட்டதாக பச்சைப்பொய் கூறி வருகிறது என EPS சாடியுள்ளார். கலசபாக்கத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், சிலிண்டருக்கு ₹100 மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு வாக்குறுதிகள் என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். உங்கள் கருத்து?

News August 18, 2025

4 நாள்களில் ₹404+ கோடி.. வசூல் சூறாவளியாக மாறிய ‘கூலி’..!

image

ரஜினி நடிப்பில் ரிலீசாகி வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது ‘கூலி’ திரைப்படம். ஆக. 14-ல் வெளியான இப்படம் 4 நாள்களில் உலகளவில் ₹404+ கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் உலகளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை கூலி படைத்திருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழில் முதல் ₹1,000 கோடி வசூலான படம் என்ற சாதனையை ‘கூலி’ படைக்குமா?

error: Content is protected !!