News August 18, 2025
ECI தலைமை ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்?

ECI-ன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர INDIA கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3ல் இரு பங்கு ஆதரவு பெற்று இந்த பதவி நீக்க தீர்மானம் வெற்றிபெற்றால், அந்த அதிகாரியை விசாரணை செய்ய குழு அமைக்கப்படும். பின்னர் குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
Similar News
News December 15, 2025
இந்தியாவுக்கு பஹல்காம்.. ஆஸி.,க்கு போண்டி

சந்தோஷத்தை தந்த சுற்றுலா தலங்களான இந்தியாவின் <<16186680>>பஹல்காமும்<<>>, ஆஸி.,-யின் சிட்னி <<18568504>>போண்டி கடற்கரையும்<<>> பயங்கரவாதத்தின் கொடூரத்தால் துயரத்தின் தடங்களாக மாறியுள்ளன. இரு இடங்களிலும் மதம் மற்றும் இனத்தை அடிப்படையாக கொண்டே தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. பஹல்காமில் 26 உயிர்களும், சிட்னியில் 15 உயிர்களும் பறிபோன நிலையில், இரண்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியான பொதுமக்களே. So sad!
News December 15, 2025
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

கிருஷ்ணகிரி EX நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப், திமுகவில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், திமுகவினரே அவரை தோற்கடித்ததால், கடும் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில், திமுகவில் இருந்து விலகிய பரிதா நவாபும் அவரது ஆதரவாளர்களும், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கருணாநிதி காலத்தில் இருந்து திமுகவில் இருக்கும் பரிதா விலகியது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
News December 15, 2025
FLASH: ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு ₹90.58

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 9 காசுகள் சரிந்து ₹90.58 ஆக உள்ளது. இதனால், பெட்ரோல், டீசலுக்கான கச்சா எண்ணெய், <<18569494>>தங்கம்<<>>, வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்வதற்கான செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் அவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


