News August 8, 2024

Olympics: மீண்டும் முத்திரை பதிப்பாரா நீரஜ் சோப்ரா?

image

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்று இறுதிப்போட்டியில் களம் இறங்குகிறார். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் அவர் தங்கம் வென்று சாதனை படைப்பாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். ஒலிம்பிக்ஸ் & உலக சாம்பியனான அவர், மீண்டும் அவர் மகுடம் சூடினால், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இரு தங்கம் வென்ற முதல் இந்தியர் & ஈட்டி எறிதலில் இரு தங்கத்தை வென்ற 5ஆவது வீரர் என்ற பெருமைகளை அடைவார்.

Similar News

News July 7, 2025

’மகள்களின் சிகிச்சைக்காக அரசு பங்களாவில் உள்ளேன்’

image

SC முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தான் பதவி வகித்தப் போது வசித்த அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளார் என புகார் எழுந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த அவர், தனது மகள்களுக்கு நெமலின் மயோபதி எனும் தசை நோய் உள்ளதாகவும், அதற்காக எய்ம்ஸில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தான் ஏற்கனவே SC நீதிபதிகள், அலுவலர்களிடம் விளக்கமளித்திருப்பதாகவும் கூறினார்.

News July 7, 2025

‘மேகதாது திட்டத்துக்கு 5 நிமிடத்தில் அனுமதி பெறுவேன்’

image

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தற்போது ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. அதைப்போன்று கர்நாடகா பாஜக எம்.பிக்கள், மத்திய அமைச்சர் குமாரசாமி மேகதாது தொடர்பாக எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என காங்., குற்றம் சுமத்தியது. இதற்கு பதிலளித்த குமாரசாமி, தமிழக கூட்டணி கட்சிகளிடம் காங்., சம்மதம் பெற்றால், மேகதாது திட்டத்திற்கு பிரதமரிடம் பேசி 5 நிமிடத்தில் அனுமதி பெற்று தருவேன் என தெரிவித்தார்.

News July 7, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 389 ▶குறள்: செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. ▶பொருள்: துணையாக இருப்போர் செவிபொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.

error: Content is protected !!