News August 4, 2024
OLYMPICS: அவுட்டிங் சென்ற வீராங்கனை வெளியேற்றம்

ஆண் நண்பருடன் அவுட்டிங் சென்ற பிரேசில் நீச்சல் வீராங்கனை அன்னா கரோலினாவை அந்நாட்டு ஒலிம்பிக்ஸ் கமிட்டி (BOC) அணியில் இருந்து நீக்கியுள்ளது. அன்னா கரோலினா, சக வீரர் சாண்டோஸ் உடன் உரிய அனுமதியின்றி ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் இருந்து வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஒழுங்கு நடவடிக்கையாக அவரை அணியில் இருந்து நீக்கிய BOC, உடனடியாக அவர் நாடு திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
பூஜா டான்ஸ் பார்க்க ரெடியா? கூலி 2nd Single அப்டேட்

‘Chikitu’ என்ற ‘கூலி’ படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. எனவே, அடுத்தடுத்து அப்டேட்ஸ்களை வழங்க படக்குழு முடிவெடுத்துள்ளதாம். அந்தவகையில், 2-வது பாடல் விரைவில் ரிலீஸாகவுள்ளதாம். இது நாகர்ஜுனா – பூஜா ஹெக்டே இடம்பெறும் பாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இப்படம் ஆக.14-ல் திரைக்கு வருகிறது.
News July 8, 2025
கடலூர் பள்ளி வேன் விபத்து: ரயில்வே கேட் கீப்பர் கைது

கடலூரில் பள்ளி <<16987572>>வேன் மீது ரயில் மோதிய விபத்தில்<<>> அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முதலில் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
News July 8, 2025
சொந்த வீடு வாங்க முடியுமா? ஜோதிட விளக்கம்

சொந்த வீடு கட்டியோ அல்லது வாங்கியோ குடியேற வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் இது சிலருக்கு நிறைவேறாத கனவாகவே இருக்கும். அதற்கு அவர்களது சொந்த ஜாதகத்தில் செவ்வாய் கெட்டு இருப்பது தான் காரணம் என்கிறார்கள் ஜோதிடர்கள். ஆகையால் செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதமிருந்து செவ்வாய்க்கு அதிபதி ஆன முருகனை வழிபட்டு வந்தால் 9 வாரத்தில் நல்லது நடக்கும் என்கிறார்கள்.