News August 7, 2024
Olympics: இந்திய அணி தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவியுள்ளது. காலிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீராங்கனைகளை, இந்திய வீராங்கனைகள் ஸ்ரீஜா, மனிகா பத்ரா, அர்ச்சனா காமத் அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் டேபிள் டென்னிஸில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது.
Similar News
News August 21, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு தகவல்

பொங்கல் பரிசுத் தொகையாக ரேஷன் கார்டுக்கு தலா 5,000 வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு தீபாவளி பண்டிகை நாளில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, ₹10,000 கோடி தேவை என்பதால், அதற்கான நிதி ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு நிதித்துறைக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாம். தீபாவளிக்கு ஜிஎஸ்டி குறைப்பை அறிவிக்க இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News August 21, 2025
விஜய் அறியாமையில் பேசுகிறார்: இபிஎஸ்

மதுரை மாநாட்டில் அதிமுகவை விமர்சித்த விஜய்க்கு, இபிஎஸ் பதிலளித்துள்ளார். பாசிச பாஜகவுடன் அடிமைக் கூட்டணி வைத்திருப்பதாக அதிமுகவை விஜய் மறைமுக சாடினார். இந்நிலையில், விஜய் அறியாமையில் பேசுவதாக இபிஎஸ் கவுன்ட்டர் கொடுத்துள்ளார். யாராலும் கட்சி தொடங்கியதும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது என்றும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வந்த உடனேயே முதல்வராகவில்லை எனவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
News August 21, 2025
BEAUTY TIPS: இந்த தப்ப பண்ணிடாதீங்க

தோல் பராமரிப்பில் Moisturizer-ன் பங்கு முக்கியமானது. சருமத்தை பாதுகாக்கும் Moisturizer-ஐ பயன்படுத்துவதில், சிலர் சில தவறுகளை செய்துவிடுகிறார்கள். அவர்கள் கவனத்திற்கு: ▶லேசான ஈரப்பதத்தில் Moisturizer-ஐ தடவவும். உலர்ந்த முகத்தில் தடவவேண்டாம். ▶skin type-க்கு ஏற்ப Moisturizer-ஐ தேர்ந்தெடுப்பது அவசியம். ▶தூங்கும் முன் Moisturizer-ஐ பயன்படுத்தவும். ▶இதனை தினமும் பயன்படுத்த வேண்டும். SHARE.