News August 6, 2024

Olympic: இறுதிப் போட்டியில் வினேஷ் போகத்

image

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். அரையிறுதியில் (50 KG) கியூபா வீராங்கனை குஸ்மானை எதிர்கொண்ட அவர் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் அவருக்கு, தங்கம் (அ) வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. மேலும், மகளிர் மல்யுத்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Similar News

News November 28, 2025

13 கிமீ வேகத்தில் நகரும் ‘டிட்வா’ புயல்

image

<<18403328>> ‘டிட்வா’ புயல்<<>> கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக IMD தெரிவித்துள்ளது. வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் இந்த புயல் சென்னைக்கு மேற்கு – தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ‘டிட்வா’ புயல் வருகிற புயல் வருகிற 30-ம் தேதி வட தமிழகம், மேற்கு ஆந்திர கடல் பகுதியை நெருங்கும் எனவும் IMD கணித்துள்ளது.

News November 28, 2025

BREAKING: விஜய் கட்சியில் ஓபிஎஸ் இணைகிறாரா?

image

செங்கோட்டையனைத் தொடர்ந்து OPS-ம் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் டிச.15 வரை கெடு விதித்துள்ள அவர், தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது திடீர் திருப்பமாக, அவரும் தவெகவில் சேரவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன. மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

News November 28, 2025

தரமான விந்தணு உற்பத்திக்கு உதவும் உணவுகள்

image

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் ஆரோக்கியமான விந்தணுவை உற்பத்தி செய்ய உதவுகின்றன. அவை, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, டெஸ்டோஸ்டிரோனை அதிகப்படுத்துவதுடன், ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு வழிவகுக்கின்றன. அவை என்னென்ன உணவுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!