News August 18, 2025
இனி 10 நிமிடத்தில் ஆன்லைனில் நிலம் வாங்கலாம்

மளிகை பொருட்களை போல இனி நிலத்தையும் 10 நிமிடங்களில் வாங்கலாம். ZEPTO நிறுவனம், ரியல் எஸ்டேட்டிலும் கால் பதித்துள்ளது. அதாவது, தனியார் லேண்ட் டெவலப்பர் நிறுவனத்தோடு இணைந்து இந்த வசதியை தொடங்கவுள்ளது Zepto. ஏற்கெனவே 10 நிமிட மளிகை டெலிவரிக்கு எதிர்ப்புகள் இருக்கும் நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு என்ன மாதிரியான வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். உங்கள் கருத்து?
Similar News
News August 18, 2025
‘INDIA’ கூட்டணியில் இதுவரை யாரும் பரிசீலனையில் இல்லை

துணை ஜனாதிபதி வேட்பாளர் பரிசீலனையில் இதுவரை யாரும் இல்லை என ‘INDIA’ கூட்டணி தெரிவித்துள்ளது. NDA கூட்டணியில், CP ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் ‘INDIA’ கூட்டணி தீவிரம் காட்டியுள்ளது. இதனிடையே, திமுக MP திருச்சி சிவா பரிசீலனையில் உள்ளதாக NDTV செய்தி வெளியிட்டது. அதனை மறுத்துள்ள ‘INDIA’ கூட்டணி, வேட்பாளருக்கான ஆலோசனை தொடர்வதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
News August 18, 2025
நான் இறந்துவிட்டேன்.. கல்லூரி மாணவர் விபரீத முடிவு

‘நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம். எனது மரணம் என் சொந்த முடிவு. ஓராண்டாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ நொய்டாவில் தற்கொலை செய்த மாணவர் சிவம் டே(24) எழுதிய வரிகள் இவை. மாணவன் 2 ஆண்டுகளாக கல்லூரிக்கு வரவில்லை எனவும், அதனை கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 18, 2025
இந்த நான்கு பேரில் யாரை சேர்க்கலாம்?

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி தேர்வு சூடுபிடித்துள்ளது. அணி தேர்வு மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், 15 பேர் கொண்ட அணியில், இன்னும் ஒரு வீரரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியாமல் தேர்வு குழு திணறி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்த இடத்திற்கான பரிசீலனையில் ஸ்ரேயஸ் ஐயர், ரிங்கு சிங், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனராம். நீங்க சொல்லுங்க இவர்களில் யாரை டீமில் சேர்க்கலாம்?